Tirumurukaarruppatai with meaning of words (திருமுருகாற்றுப்படை சொற்பொருளுடன்)



திருமுருகாற்றுப்படை

Thirumurugatrupadai 

by Nakkirar (2nd century AD)


 

ஆற்றுப்படை என்ற சொல்லிற்கு வழிப்படுத்துதல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு புலவர் ஒரு அரசனிடமோ அல்லது ஒரு வள்ளலிடமோ சென்று அவனைப்பாடி அவனிடம் பரிசு பெற்று தன்  வறுமையைப் போக்கிக் கொள்கிறார். பின்பு ஒரு வறுமையில் வாடும் ஒரு நண்பனிடம் சொல்கிறார் : "நீ இந்த வள்ளலிடமோ அல்லது அரசனிடமோ சென்றால் உனக்குப் பரிசு கிடைக்கும். உன் வறுமையைப் போக்கிக்கொள்ளலாம்."  இதைப் பாடுவதுதான் ஆற்றுப்படை என்பர். பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய பாடல்கள் இப்படியே அமைந்துள்ளன. இங்கு நக்கீரர் தாமறிந்த முருகனிடம் அன்பர்களை அனுப்புவதாக அமைந்ததே திருமுருகாற்றுப்படை.

திருமுருகாற்றுப்படையும் நக்கீரர் எழுதிய மற்றும் ஒன்பது பாடல்களுடன் 11ம் திருமுறையில் இடம்பெற்றிருக்கின்றன.

நக்கீரர் இந்நூலை ஆறு பகுதிகளாகப்பிரித்து ஒவ்வொரு பகுதியையும்  ஒவ்வொரு படை வீட்டிற்குத்  தந்திருக்கிறார் .

இங்கு பாட்டு வரிகள் நீல நிறத்தில் தரப்பட்டிருக்கின்றன. பாடல் வரியை அடுத்து அவ்வரியின் பொருள் வருகின்றது . அதற்குக் கீழே ஆங்கில மொழிபெயர்ப்பு வருகின்றது. அதற்குக் கீழே அவ்வரியில் உள்ள சொற்களுக்குப் பொருள் தரப்பட்டிருக்கின்றது. இந்த நூலில் அரும்பதங்கள் பல வருவதனால் வரி வரியாகப் பொருள் தரப்பட்டிருக்கின்றது. பல வரிகளை ஒன்றுசேர்த்துப் படித்தால் சொற்பொருள்களை ஞாபகத்தில் வைத்திருப்பது கடினமாகிவிடும்.

 The Tamil word 'artruppadai' means showing or leading the way. A poet goes to a king or a philanthropist, writes a poem praising him and sings it to him, and receives a gift from him and alleviates his poverty. Then he tells a friend who lives in poverty: "If you go to this philanthropist or to this king you will get a reward. You can get rid of your poverty." Poems like this are called 'artruppadai' . There are several poems like this in the Sangam literature."Porunar artruppadai", "Sirupaan artruppadai", "Perumpaan artruppadai", "Malaipadukadam", are poems of this nature. In this poem, Nakkīrar shows the way to reach Murugan whom he knew well.

Thirumurugatrupadai is featured in the 11th' Thirumurai ' along with nine other poems  written by Nakkirar. Thirumurai is a highly revered holy scripture.

Nakkirar in front of Lord Murugan.


Nakkīrar divides this book into six parts and devotes each part to each of the six Murugan's war camps.

Here the lines of the poem are given in blue. Next to the poem comes the meaning of the poem in Tamil, followed by its English translation. Below that is the meaning of the words in that line. In this book meaning is given line by line. Reading multiple lines together can make it harder to remember the semantics

திருமுருகாற்றுப்படை 1
Thirumurugatrupadai  1

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்


திருப்பரங்குன்றம் என்னும்  கோயில், மதுரைக்குத் தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டார்.

 Thiruparankundram Temple is located about 8 km southwest of Madurai in the distant town of Thiruparankundram. It was here that Murugan married Deivaanai.

[முருகன் பெருமை]

                                                        [சூரியன் உவமை]
                                                        [Description of the sun]

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு            1
உலகத்தார் சந்தோசமடைய  வலமாக எழுந்து உலகைச் சுற்றுவதுபோல் தோன்றுகிற;

The world delights as the sun rises and goes wandering on its right.

 உலகம் = உலக மக்கள்;
 உவப்ப =   சந்தோசமடைய 
 வலன் ஏர்பு = வலப்பக்கமாக எழுந்து;
 திரிதரு = சுற்றுவதுபோல் தோன்றுகிற;

பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு            2
பலரும் புகழ்ந்து வணங்கும் சூரியனைக் (காலையில்) கடலில் கண்டாற் போல,

The sun is respected by many as it is seen rising  above the sea (in the morning).

பலர் = பலரும்;
புகழ் = புகழ்ந்து;
ஞாயிறு = சூரியன் 
கடல் கண்டாங்கு = கடலில் தோன்றியதைப் போல;

 ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி            3
கண்களை இடைவிடாமல் இமைத்துப் பார்க்கவேண்டி  வீசி நெடுந்தொலைவு எங்கும் சென்று பரந்து தோன்றுகின்ற ஒளியையும்,

 And ceaselessly the eyelids flutter from his (sun's) light shining from so far off,

ஓ அற =  இடை விடாமல்;
இமைக்கும் = கண்களின் இரண்டு இமைகளையும் மூடுதல்;
சேண் = நெடுந்தூரம்;
விளங்கு = தோன்றுகின்ற;
அவிர் = பிரகாசி;
ஒளி =  ஒளி;

                                                        [தாங்கும் பாதங்கள்]   
                                                                [Bearing feet]

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள்             4
அடியார்களைத் தாங்கிக் காக்கும் அழகுடைய பலம் பொருந்திய   பாதங் களையும்;

His beautiful and strong feet that protect the devotees,

உறுநர் =  அடியார்களை;
தாங்கிய = தாங்கும்;
மதன் = அழகு;
உடை = உடைய
நோன் = பலம் பொருந்திய;
தாள் = பாதங்கள்;

                                                      [முருகனின் வலிய கைகள்
                                                             [Murugan's strong hands]

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை    5
அழிக்க வேண்டியவர்களைத் தேய்த்து அழித்த இடி ஒத்த பெரிய  கைகளை உடையவனும்,

and thunder like big hands that have destroyed all who had to be destroyed (unrighteous),

செறுநர் = பகைவர்;
தேய்த்த = தேய்த்;
செல் = இடி;
உறழ் = போல;
தடக்கை = பெரிய கை;

                                          [தெய்வானையின் கணவன்]
                                                           [Theivaanai's husband]

மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன்            6
குற்றம் அற்ற கற்பினையும் ,பிரகாசமான நெற்றியையும்  உடைய தெய்வானையின் கணவனும்,

And the husband of Theivaanai, who has blameless virtue and a bright forehead,

மறு = குற்றம்;
இல் = இல்லாத;
கற்பின் கற்பினையும்;
வாள்நுதல் = பிரகாசமான நெற்றியையுடைய (தெய்வானையின்);
கணவன் = கணவனும்;

                                          [முருகனது மார்பு மாலை]
                                                   [Murugan's chest garland]

கார்கோள் முகந்த கமம் சூல் மாமழை             7
கடலிலே நீரை உட்கொண்டதனால் நிறைந்து கருக்கொண்ட கரிய முகில்,

The dark clouds filled with sea water ready to rain;

கார் = கரிய;
கார்கோள் = கடல் நீரை உட்கொண்டமழை மேகம் ;
முகந்த = உட்கொண்ட;
கமம் =  நிறைந்து;
சூல்   = கர்ப்பம், மழை பெய்வதற்கு தயாராக இருக்கும் நிலை.
மாமழை = முகில்;

குறிப்பு 

முகிலைப் பற்றி இப்படி ஒரு பாட்டு உண்டு.

ஈயாத வற்சரின் வௌவி நல்ல இரவலர்க் கீகின்ற புரவலர் போல 
ஓயாத உவர்கடல ள்ளி   மிக உண்டு திரண்டு புரண்டெழு மேகம் 
செங்கதி ரோன்தனை யெள்ளி நின்று சிரிப்பது போல விடையிடை மின்னி 
அங்கவ நோடறை கூவி எதிர்த் தார்ப்பது போல விடிந்து முழங்கும்.

இதன் பொருள்:

ஈயாத  உலோபிகளிடமிருந்து செல்வத்தை எடுத்து வறியவர்களுக்குக் கொடுப்பதுபோல , ஓயாத கடலிலிருந்து வானம் நீரை எடுத்து வறண்ட நிலங்களில் மழையாகப் பெய்கின்றது என்ற இப் புலவர் வாக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.

 Like taking wealth from the ungenerous rich and giving it to the poor, the clouds take water from the restless sea and rain on dry lands.

வாள்போழ் விசும்பில் வள்உறை சிதறி            8
மின்னல் ஒளி பிளந்து வீசுகின்ற  ஆகாயத்திலே பெரும் 
 நீர்த்துளிகளைச் சிந்தி,

The clouds where lightning flashes, rain large drops of water,

வாள் = ஒளி;
போழ் = பிளக்கும்;
விசும்பு = ஆகாயம்;
வள் உறை = பெரும் ;
சிதறி = (நீர்த்துளிகளைச்) சிந்தி;


தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து            9
ஆண்டின் முதல் மழையை மிகுதியாகப் பெய்த குளிர்ந்த நறுமணமுள்ள காட்டில்,

In the cool fragrant forest, which received the first rains of the year in abundance,

தலை = ஆண்டின் முதல் ;
பெயல் = மழைத்தாரை;
தலைஇய = பெய்த;
தண் = குளிர்ந்த;
நறுங் = நறுமணமுள்ள;
கானத்துகாட்டில்;

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து            10
இருட்டாகும்படி அடர்ந்துள்ள பருத்த அடிமரத்தையுடைய செங்கடம்பின்;

Thick trunks of dense red 'kadampu' trees  [Eugenia racemosa] blocking the sunlight give darkness to the forest.

இருள்பட = இருட்டாகும்படி;
பொதுளிய =அடர்ந்த;
பராரை = பருத்த அடிப்பகுதி;
மராஅத்து = செங்கடம்பு மரம் [Eugenia racemosa];
[கடம்பு மாலை அணிவதனால் முருகனுக்குக் கடம்பன் என்றும் ஒரு பெயர் உண்டு.]  

செங்கடம்பு மரம்

உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்             11
உருளை போன்ற வட்டமான பூக்களால் தொடுத்த குளிர்ந்த மாலை புரளுகிற மார்பை உடையவனும்,

The one with the chest adorned with flower garland like a round cylinder,

உருள் = உருளை போன்ற;
பூந் = பூக்களால்;
தண் = குளிர்ந்த;
தார் = மாலை;
புரளும் = புரளுகிற;
மார்பினன் = மார்பை உடையவனும்;

 

           ['சூரர மகளிர்'  வருணனை]
          [Description  of 'Surara Women']
(12 – 41)

(சூரர மகளிர் காட்டுத் தெய்வப் பெண்கள் என்று கருதப்படுகிறது. இம்  மகளிரைப் பற்றிய குறிப்பு, அகநானூறு, குறுந்தொகை, யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களில் காணலாம்.)

(Surara women are considered to be divine people living in the forest. The references to this type of women are found in other texts of Sangam literature like Akananuru, Kuruntogai, yapparunkalakarikai.)

மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்             12
பெரிய உயரமாக வளர்ந்துள்ள மூங்கில் உள்ள மலையில்,

In the hill, where bamboo has grown to great heights,

மால் = பெரிய;
வரை = மூங்கில்;
நிவந்த = உயரமாக வளர்ந்

சேண் = தூரம்;
உயர் = உயர்ந்துள்ள;
வெற்பு = மலை;

கிண்கிணி கவைஅய ஒண்செஞ் சீறடி    13
சதங்கை அணிந்த ஒளியுடைய சிவப்பு  நிறமான சிறிய கால்களையும்,

Wearing tinkling anklets on their small rosy legs,

கிண் கிணி = சதங்கை;
கவைஇய = அணிந்த;
ஒண் = 
ஒளிமயமான;
செஞ் = சிவப்பு;
சீறடி =   சிறிய கால்கள்;

கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்   14
திரண்ட காலையும் உள்வாங்கிய இடையையும் பருத்த தோளையும்,

Their sturdy leg (part below the knees) and slender waist and broad shoulders,

கணைக்கால் = முழங்காலின் கீழ்  அடிப்பாதத்தின்மேலுள்ள  திரண்டபாகம்;
வாங்கிய = உள்வாங்கிய;
நுசும்பு = இடுப்பு;
பணைத்தோள் = பருத்த தோள்;

கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்             15
இந்திரகோபப் பூச்சி போன்ற சாயம் தோய்க்காமலேயே இயற்கையாகவே சிவந்துள்ள பூவேலைப்பாடுடைய உடையினையும்,

Their naturally reddish, like a beetle, un-dyed floral dress,

கோபம் = 'இந்திர கோபம்' எனப்படும் செந்நிறப் பூச்சி;
அன்ன =  போன்ற;
தோயாப் = சாயம் தோய்க்காமலேயே சிவந்துள்ள;
பூந்துகில் = பூவேலைப்பாடுடைய உடையினையும்;

 

இந்திர கோபம்

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்         16
பல 
விதமானகாசுகளை சேர்த்துக் கோத்த சிறிய நடன ஆபரணம் (ஒட்டியானம் ) அணிந்த இடையினையும்,

The waist adorned by the small dance ornament (ottiyanam) with various coins,

ஒட்டியானம்

பல்காசு = பல விதமான காசுகள்;
நிரைத்தசேர்த்துக் கோத்த;
சில்காழ் = சிறிய நடன இடுப்பணி;
அல்குல் = இடுப்பு;

கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்         17
கையால் செயற்கையாய் செய்து உருவாக்காது, இயற்கை எழில் வாய்ந்த பொலிவினையும்,

And with glittering natural ornaments not fashioned by any hand, 

கை = கையால்;
புனைந்து = செய்து;
இயற்றா உருவாக்காத,( இயற்கையான);
கவின் =  எழில்; 
வனப்பு = பொலிவு;

நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர்இழை         18
நாவல் (சாம்பூநதம்) என்னும் பெயருடைய ஒருவகைப் பொன்னால் செய்த பிரகாசிக்கின்ற ஆபரணங்களையும்;

And glittering ornaments made of a kind of gold called 'sambunatham'. This high quality gold has the color of jambu fruit (also known as rose apple), hence the name (jambu gold);

நாவல்


நாவல் = ஜம்புநாவல் பழம் போன்ற நிறமுடைய 'சாம்பூநதம்' எனப்படும்  பொன்
பெயரிய =  பெயருடைய;
பொலம் = பொன்;
புனை = செய்த;
அவிர் = பிரகாசிக்கின்ற  (ஒளி)
இழை = ஆபரணங்கள் ;

சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனி             19
நீண்ட தூரத்தையும்  தாண்டி ஒளியோடு பிரகாசிக்கின்ற குற்றம் அற்ற உடலையும் (உடையவராய்),

Their body devoid of blemishes, shines with light beyond long distances,

சேண் =  நீண்ட தூரம்(நெடுந்தூரம்)
இகந்து = தாண்டி;
விளங்கும் = ஒளியோடு பிரகாசிக்கின்ற;
செயிர்தீர் = களங்கமற்ற ( குற்றமற்ற)
மேனி = உடம்பு;

துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச்             20
தோழிமார் ஆய்ந்து ஒத்திருக்க இரண்டாகப் பிரித்துமுடித்த, 

 Companions split (the hair) in two parts matching each other and trussed up,

துணையோர் =  தோழியர்;
ஆய்ந்த = ஆய்ந்து முடித்த;
இணை = ஒத்திருத்தல்;
ஈர்ஓதி = இரண்டாகப் பிரித்த;

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு       21
கூந்தலிலே சிவந்த காம்பையுடைய சிறிய வெட்சிப் பூக்களை  இடை இடையே செருகி, 

 Placing tiny petals of the red-stemmed 'Vedchi' in between,


வெட்சி மலர்

செங்கால் வெட்சி = சிவந்த காம்பினை உடைய வெட்சி மலர்;
சீறிதழ் = சின்ன இதழ்;
இடை =  இடை இடையே;     
இடுபு = வைத்து;

பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளி       22
பசுமையான தண்டையுடைய குவளை மலரின் தூய இதழ்களைக் கிள்ளி;

And have plucked the moist and pure petals of the green-stemmed 'Kuvalai',

பைந்தாள் = பசுமையான தண்டையுடைய;
குவளை = குவளை மலரின்;
தூஇதழ் = தூய இதழ்களை;
கிள்ளி = கிள்ளி;

குவளை மலர்


தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து       23
தெய்வ உத்தி என்னும் பெயருடைய தலை அலங் காரத்தையும், வலம்புரிச்சங்கு என்னும் தலை அலங்காரத்தையும் பொருத்தமான இடத்தில் அமைத்து;

They then set the head ornaments called 'Deiva Uthi' and 'Valampuri chanku' in the appropriate place;

தெய்வ உத்தி = ஒருவகைத் தலை அலங்கரம்;
வலம்புரி = வலம்புரி;
வயின்  பொருத்தமான இடத்தில்;
வைத்து = வைத்து;

திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்     24
பொட்டு வைத்த நல்ல வாடை வீசுகின்ற அழகிய நெற்றியில்;

The pottu (worn on the forehead by Hindus) set on their beautiful forehead that exudes sweet fragrance,

திலகம் = பொட்டு;
தைஇய = வைக்கப் பட்ட;
தேம்கமழ் = நறுமணம் வீசுகின்ற;
திருநுதல் = அழகான நெற்றியில்;


மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்து             25

சுறாவினது திறந்த வாய்போன்ற ஆபரணத்தை (நெற்றியில்) தொங்கச் செய்து அழகுபடுத்தியும்,

Accentuated by an ornament like an open-mouthed shark hung and decorated on the forehead.

மகர= சுறா மீன்;
பகுவாய் = திறந்த வாயைப் போன்ற  ஒருவகைத் தலை அலங்காரம்;
தாழ மண்ணுறுத்து = நெற்றியில் கீழாகத்தொங்குமாறு அலங்காரம் செய்து;

துவர் முடித்த துகள்அறும் உச்சிப்     26
பிரித்து முடித்த குறையில்லாத (குற்றம் அற்ற)   உச்சியிலே (கொண்டையிலே), 

Split and coiled flawless hair,

துவர முடித்த = பிரித்து முடித்த;
துகள் அறும் உச்சி = குறையில்லாத உச்சி(கொண்டை);

பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு     27
பெரிய குளிர்ந்த சண்பக மலரின் கரிய புற இதழைச் செருகியும்,

They placed the black outer petal of the cool and big 'Sanpakam' (Magnolia champaca) blossom, (in their hair),

பெரும் = பெரிய;
தண் =  குளிர்ந்த;
சண்பகம் = சண்பக மலரை;
செரீஇ = செருகி;
கருந்தகட்டு = கரிய வெளி(புற) இதழை

 

                                                                சண்பகம்


உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டி     28
உள்ளே துவாரம் உடைய அழகுள்ள மருதப் பூக்கொத்துக்களை (அக்கொண்டையின் மேலே) வைத்தும்,

Putting beautiful 'Maruthu' (Terminalia arjuna) flowers with a hole inside in bouquets (on their hair bun).

உள் ஐ பூ = உள்ளே துவாரம் உடைய பூ;
மருதின் = மருதப் பூ;
ஒள் = அழகுள்ள;
இணர் = பூங் கொத்து;
அட்டி = வைத்து;

      மருதப் பூ


கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு     29
கிளையிலிருந்து அழகாகத் தோன்றி எழுந்த, நீரின் கீழுள்ள சிவந்த மொட்டுக்களை,

Red buds that emerge beautifully from the branch underwater,

கிளைக்கவின்று =  கிளையிலிருந்து அழகாகத் தோன்றி;
எழுதருஎழுந்த;
கீழ்நீர்ச் செவ்வரும்பு = நீரின் கீழுள்ள சிவந்த மொட்டு;
 

இணைப்புறு பிணையல் வளைஇத்துணைத்தக             30
துணையாக இரு பக்கத்திலும் வளைய வைத்து ஒன்றிற்கொன்று இணையாக இருக்கவும்;

Into a garland, arranged to encircle their two twisted locks, to match each other.

இணைப்புறு பிணையல் = பூக்களை ஒன்று சேர்த்துக் கட்டிய மாலை;
வளைஇ = வளைய வைத்து;
துணைத்தக = ஒன்றிற்கொன்று துணையாக;

வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்             31
வளம் பொருந்திய காதுகளில் நிறையச் செருகிய ஒளிமயமான அசோகத்தளிர் (கீழே தொங்கி);

On top of their sumptuous ears bright sprouting leaves of 'Ashoka' ((Saraca asoca))hanging down;

துணைத்தக = ஒன்றிற்கொன்று துணையாக;
வண் காது = வளம் பொருந்திய காதுகள்;
நிறைந்த = நிறைந்த;
பிண்டி = அசோகம்;
ஒண்தளிர்ஒளிமயமான அசோக
த்தளிர்;
 

அசோகப் பூ

நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்        32
நுணுக்கமான வேலைமிக்க ஆபரணங்கள் திடமான நெஞ்சில் அசைந்துகொண்டிருக்கவும்,

Their sturdy chest, firm and fair, adorned to extreme, with delicate jewels  with intricate workmanship, dangling,

நுண்பூண் =  நுணுக்கமான வேலைமிக்க ஆபரணங்கள்;
ஆகம் = நெஞ்சு (மார்பு);
திளைப்ப = ஆட  (அசைதல்)
திண் = திடமான;
காழ் = வயிரமுடைய;

நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை        33
நறுமணமுள்ள  சந்தனக்)கட்டையை அரைத்து உண்டாக்கிய பொலிவும் நிறமும் மிக்க சந்தனக் குழம்பினை, 

Fragrant sandalwood ground finely to a bright, fragrant and colourful paste,

நறும் = நறுமணம் உடைய;
குறடு = [சந்தன] மரத்துண்டு(கட்டை);
உரிஞ்சிய = அரைத்து (உரைத்த) ;
பூங்கேழ் =  அழகிய நிறம் ;
தேய்வை = களியை (குழம்பு)

தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின்        34
மணம் கமழும் மருதப் பூங்கொத்தினைப் பதித்தாற்போல கோங்கின்;

Their fragrant bouquet of 'Maruthu' (Terminalia arjuna) flowers, like the tight-petaled buds of 'Kongku' (Bombax ceiba).

தேம்கமழ் = மணம் கமழும்;
மருது = மருத மரம்;
இணர் = பூங் கொத்து;
கடுப்ப = போன்ற;
கோங்கு = கோங்கு மரம்;

 

மருதப் பூ

கோங்கு

குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்             35
(கோங்கு மரத்தின்) குவிந்த மொட்டுப் போன்ற இள முலைகளில் பூசியும்,

Young breasts like the full blown bud of 'Kongu' (Bombax ceiba) tree smeared in abundance, with (sandalwood paste ),

குவி = குவிந்த;
முகிழ் = அரும்பு;
கொட்டி = பூசியும்;
இளமுலை = இள முலைகளில்;
விரிமலர் = விரிந்த 
மலர்;

 

கோங்கு அரும்பு

  

வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர        36

(மேலும் அந்தச் சந்தனக் குழம்பின் மேலே) விரிந்த வேங்கைமலரின் நுண்ணிய மகரந்தப் பொடியை அப்பிப்பதித்தும், அழகுபெறத் தோன்றும்படி,

(And on top of that sandalwood paste) scattering the fine pollen of the 'Vengai' (Pterocarpus marsupium) tree and make it look beautiful,

வேங்கை = வேங்கை மரம்;
நுண் = நுண்ணிய;
தாது = மகரந்தம்;
அப்பி = அப்பியும்;
காண் = அழகு;
வர = வர;


 

வேங்கைமலர்

வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா        37
விளாமரத்தின் சிறிய தளிரைக் கிள்ளி (அம்முலைகளின் மேல்) வைத்துக்கொண்டு,

They pluck small sprouts of the wood apple tree  and keep them [on the breasts]. 

வெள்ளிள் = விளா மரம்;
குறுமுறி =  சின்ன இளம் இலை(சிறிய தளிர்);
கிள்ளுபு =  பிடுங்கி  (கிள்ளி);
தெறியா = அப்பி(தெறித்து);  


விளா மர தளிர்



கோழி ஓங்கிய வென்றுஅடு விறல்கொடி        38
வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன்            39
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி               40

கோழிஉருவம் வரையப்பட்ட, எதிர்நின்று வெல்லும் (முருகனது) வெற்றிக்கொடி பெரிதும் வாழ்க என்று வாழ்த்தியும், பலருஞ் சேர்ந்து சிறப்பு மிக்க மலைப்பகுதியெல்லாம் எதிரொலிக்கும்படி முருகனைப் பாடியும்,

 They hoist high the flag of Murugan with a cock drawn on it, and singing together 'Long life to you!' and praising Murugan, in loud voice that resounds in the entire mountainous region,

 

கோழிக்கொடி

கோழி = கோழிஉருவம் வரையப்பட்ட;
ஓங்கிய = உயர்ந்த;
வென்றுஅடு = எதிர்நின்று வெல்லும்;
விறல்கொடி = வெற்றிக்கொடி;
வாழிய = வாழ்க;
பெரிது = பெரிதும்;
என்று = என்று;
ஏத்திப் = போற்றி;
பலருடன் = பலருஞ் சேர்ந்து;
சீர்திகழ் = சிறப்பு மிக்க;
சிலம்பு = குன்று (மலை);
அகம் = பகுதி;
சிலம்ப =  
எதிர் ஒலிக்க
பாடி = பாடியும்;

சூரர மகளிர் ஆடும் சோலை              41
தெய்வ மகளிர் விளையாடுகின்ற சோலை;

The gardens where the divine ladies play; 

சூரர மகளிர் தெய்வ மகளிர்;
ஆடும் = விளையாடுகின்ற;
சோலை = சோலை;

 குறிப்பு

"சூரரமகளிர்" என்பது அவர்களுடைய பெயர். அதற்கு நாம் பொருள் காண்பது தவறு. சூரர = அஞ்சுதற்குரிய;

"Suraramakalir" is their name. It is wrong for us to give a meaning for it.


                                                   [முருகனின் தலை மாலை]
                                                                [Murugan's head garland]

மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து             42
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்                        43
குரங்கும் புக முடியாத மரங்கள் அடர்ந்து செறிந்த  மலைப்பகுதியில் தேனீக்களும் மொய்க்காமல், மலர்ந்துள்ள தீயைப் போன்ற நிறமுடைய செங்காந்தள் மலர்;

Mountain forests, with trees so dense, that even the monkeys and even bees can't find their way, where fire coloured 'Cenkantal' (
Gloriosa superba) flower blossoms;

மந்தி = குரங்கு;
அறியா = அறிய முடியாத;
மரன்பயில் = மரங்களை உடைய;
அடுக்கம் = மலைத்தொடர் (பக்க மலை)
சுரும்பு = தேனீ
மூசா = (மொய்க்காத)
சுடர்ப்பூங் காந்தள் = நெருப்பைப் (தீயைப்) போன்ற நிற முடைய செங்காந்தள் மலர்


செங்காந்தள் மலர்


பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்           44
பெரிய குளிர்ச்சியான 'கண்ணி' எனப்படும் ஒருவகை மாலையைத்  தலையில் அழகுற அணிந்தவன்.

The one who wears a kind of garland called  'kanni' on his head.

பெருந் = பெரிய;
தண் 
= குளிர்ச்சியான;
கண்ணி = 'கண்ணி' எனப்படும் ஒருவகை மாலை;
மிலைந்த = அழகுற அணிந்த;
சென்னியன் = சிரசு உடைய முருகன்; 


 [முருகன் வேல்] 
[Murugan's spear]

பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு             45
பாறைக்கும் முந்திய  பனி போல உறைந்து குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து,

Going into and disturbing the cold sea, that is older than the formation of rocks, frozen like ice,

பார் = பாறை;
முதிர்முந்திய;
பனிக்கடல் = பனி போல உறைந்து குளிர்ந்த கடல்;
கலங்க உள்புக்கு = கலங்கும்படி உள்ளே புகுந்து;

சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்              46
சூரர்களின் முதல்வனான சூரபன்மனைக் கொன்ற, ஒளிவீசுகிற, இலைவடிவான நீண்ட வேலை (உடையவனும்);

The luminous, leaf-like long spear that killed Surapanman, the first of the Asuras (giants);

சூர்முதல் = அசுரர்களின் தலைவன் [சூரபன்மன்];
தடிந்த = பிளந்து கொன்ற;
சுடர் = ஒளி;
இலை = இலை வடிவான;
நெடுவேல் = நீண்ட வேல்.

 [போர்க்களத்தில் பேய் மகள் ஆடிய துணங்கைக் கூத்து]
[Dancing of the  ghost daughter on the battlefield]
(47 – 56)
 

உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்             47
(நெய் இல்லாததினால்) வறண்ட மயிரினையும், வரிசை மாறிய பற்களையும், பெரிய வாயினையும்,

their dry hair (due to lack of oil), uneven teeth and large mouth,

உலறிய கதுப்பு = நெய் இல்லாததினால் வறண்ட தலை முடி
பிறழ்பல் = வரிசைதவறிய பற்கள்;
பேழ் = பெரிய;
வாய் =  வாய்;

சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்          48
சுழலும் கருவிழிகளையும் ஈரப்பற்றுள்ள கண்களையும், அஞ்சத்தக்க பார்வையினையும்

Her rolling green eyes and fiery look are terrifying to see.

சுழல்விழி = சுழலும் விழியுள்ள;
பசுங்கண் = ஈரப்பற்றுள்ள (பசிய)  கண்களையும்; 
சூர்த்த நோக்கின் =  பயம்  தரும்  பார்வையுடன்; 

கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்          49
சுழலும் கண்ணையுடைய கோட்டானோடு கொடிய பாம்பு போன்ற தோடு தொங்குவதனாலே,

Because of her earrings shaped like rotating eyes of an owl and venomous snake hanging from her ears, 

கழல்கண் = சுழலும் கண்கள்; 
கூகையொடு = ஆந்தை;
கடும்பாம்பு = கொடிய பாம்பு;
தூங்க = தொங்குவதனாலே;
 
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு         50
பெரிய முலைகளைத் தொடுமளவிற்கு நீண்ட காதணிக ளையும், அழுத்தமில்லாத வயிற்றினையும்,

Large earrings long enough to touch her breasts, and her jagged out belly,

பெருமுலை அலைக்கும் காதின் = பெரிய முலைகளைத் தொடுமளவிற்கு நீண்ட காதணிகள்;
பிணர் = அழுத்தமில்லாத;
மோடு = வயிறு;

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்         51
நடுங்கச் செய்யும் நடையினை உடைய கண்டார் அஞ்சத்தக்க பேய்ப் பெண்,

Her strut is so very frightening; She is dreadful to look at, this female ghost,

உருகெழு = நடுங்கச் செய்யும்;
செலவு = நடை;
அஞ்சுவரு = காண்போர் அஞ்சத்தக்க;
பேய்மகள் = பேய்ப் பெண்;

குருதிஆடிய கூர்உகிர்க் கொடு விரல்         52
இரத்தம் தோய்ந்த கூரிய நகத்தையுடைய கொடிய விரலாலே,

With a blood stained deadly finger with sharp finger nail,

குருதி ஆடிய = இரத்தம் தோய்ந்த;
கூர் = கூர்மையான
உகிர்= நகம்;
கொடு விரல் = கொடிய விரல்;

கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை         53
கண்ணைத் தோண்டி உண்பதனால் துர்நாற்றம் வீசும் கரிய (அரக்கர்) தலையை,

(Having) Black (monster) head that stinks due to digging into the eyes,

கண்கண்ணை;
தொட்டு =  துளைத்து ;
உண்டஉண்பதனால்;
கழிமுடை = துர்நாற்றம் வீசும்;
கருந்தலை = கரிய (அரக்கர்) தலையை;

ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர         54
ஒளிமயமான கைவளை அணிந்த பெரிய கையிலே ஏந்திக் கொண்டும், அஞ்சும்படி,

In their large hands with glittering bangles,  fearfully,

ஒண்தொடித் ஒளிமயமான காப்புக்களை அணிந்த;
தடக்கையின் பெரிய கை;
ஏந்தி = ஏந்திக் கொண்டும்;
வெருவர = அச்சப் படும் படியாக;

வென்று அடு விறல்களம் பாடித் தோள்பெயரா         55
முருகனது போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டும். தோளைத் தூக்கியசைத்து;

And singing praises of Murugan's victory in the battlefield and wiggling her shoulders;

வென்று = எதிர் நின்று;
அடுவிறல் = போரில் பெறும் வெற்றி;
களம் பாடித் = போர்க்களத்தைப் புகழ்ந்து பாடிக் கொண்டும்;
தோள்பெயரா = தோளைத் தூக்கியசைத்து;

நிணம்தின் வாயள் துணங்கை தூங்க             56
கொழுப்பைத் தின்னும் வாயை உடையவளாய்த் துணங்கை என்னும் கூத்தை ஆடிக்கொண்டிருக்க;

The monster that eats fat and performs a dance called 'thunankkai';

நிணம் = கொழுப்பு;
தின் வாயள் = தின்னும் வாயை உடையவளாய்;
துணங்கை = [போர்க்களத்தில்] அசைந்து ஆடும் ஒருவகைக் கூத்து;
தூங்க = ஆட;

                                                           [அரக்கரை வென்றமை
                                                                 [Victory over the giants]
                                                                 (57 – 60)

இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை        57
மனிதர் , விலங்கு ஆகிய இருவகையான அமைப்புகளையும் கொண்ட  ஒரு பெரிய அரக்க உடலை;

A large giant body with both human and animal structures;

இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை = குதிரை முகமும்  பெரிய மனித உடலும்;

குறிப்பு
[சூரன் குதிரை முகத்துடன் கூடிய ஒரு மனித உடம்பெடுத்தான்.]

Note:
[Suran assumes a human form with the face of a horse.]

அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி             58
அறுத்து வேறு வேறு கூறாக்கும் வகையில் அஞ்சும்படி எதிர் சென்று;

Go (to face the enemy) with a view to cut the enemy asunder into separate pieces;

அறு = அறுத்து;
வேறு வகையின் = வேறு வேறு கூறாக்கும் வகையில்;
அஞ்சுவர = அச்சம்தோன்ற;
மண்டி = எதிர் சென்று;

அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்        59
அரக்கரின் நல்ல பலம் அடங்கும்படிகீழ் பக்கமாக பூத்திருக்கும்  மலர்களை உடைய,

With a view to stymy the giants, branch with flowers on the lower side,

அவுணர் = அசுரர்;
நல்வலம் = நல்ல பலம்;
அடங்க = அடங்கும்படி;
கவிழ் இணர் = கீழ் பக்கமாக
ப் பூத்திருக்கும் மலர்களை உடைய;

மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து                  60
மாமரமாக நின்ற அரக்கர் முதல்வனாகிய சூரபன்மனை வெட்டிக் கொன்ற, களங்கம் அற்ற வெற்றியினையும்;

With the impeccable victory of cutting asunder Surapanman, the king of the giants, who has now assumed the form of a mango tree, 

மாமுதல் தடிந்த = மாமரத்தை அடியோடு வெட்டிய;
மறு இல் = குற்றம் இல்லாத;
கொற்றம் = வெற்றி;

 குறிப்பு:
சூரபன்மன் குதிரையின் தலையோடு கூடிய பெரியதொரு மனித உடல்  போன்ற உருவம் எடுத்தான்.  முருகன் அவ்வுருவத்தை  வெட்டினார்;   அதன்பின் கீழ் நோக்கி மலர்ந்துள்ள பூங்கொத்துக்களையுடைய ஒரு மாமரம் போல்  உருவம் எடுத்தான். முருகன் அவ்வுருவத்தையும்  வெட்டினார்.

Soorabhanman took the form of a large human body with the head of a horse. Lord Murugan cut him in that form; He then took the form of a mango tree with bouquets in bloom towards the bottom. Lord Murugan cut him in that form also.

  [வீடுபேறு
[Salvation]

எய்யா நல்இசை செவ்வேல் சேஎய்             61

எவராலும் அறிய முடியாத சிறந்த புகழினையும் செம்மையான வேலினையும் சிவந்த நிறத்தினையுமுடைய முருகப் பெருமானின்;

Lord Murugan with a reddish tan, has a powerful red spear and immeasurable fame that no one can fathom.

எய்யா நல்லிசை = அளந்தறிதற்கரிய நற்புகழ்;
செவ்வேல் = செம்மையான வேலினையும்;
சேஎய் = சிவந்த நிறமுடைய முருகன்;

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு             62
சிவந்த கால்களைச் சென்றடையும் சிறந்த உள்ளத்துடன்;

With the best intention to reach red feet of Murugan.

சேவடி = சிவந்த கால்கள்;
படரும் = சென்றடையும்;
செம்மல் உள்ளம் = சிறந்த உள்ளம்;

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்            63
பிறருக்கு நன்மைகளைச் செய்ய விரும்பும் மனப்பாங்கு உடைய நீ இருக்குமிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குப்  பிறருக்கு நன்மை செய்யப்  போக விரும்பினால்;

If you have  the attitude of wanting to do good to others and if you want to move from where you are to another place to do good to others;

நலம்புரிக்கொள்கை =  நன்மைகளைச் செய்ய விரும்பும் மனப்பாங்கு;
புலம் பெயர்ந்து உறையும் = இருக்குமிடத்திலிருந்து 
மற்றோர் இடத்திற்குச் சென்று தங்கும்;

செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்            64
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப            65
பயணத்தினை நீ விரும்பினாயெனில், பலவகையில் நல்ல மனதில் உள்ள இனிய விருப்பம் நிறை வேறும்படி;

If you wish to travel for that purpose, in many ways your good intention to come to fruition;

செலவு = பயணத்தினை;
நீ = நீ;
நயந்தனை = விரும்பினால்;
ஆயின் = எனில்;
பலஉடன் = பலவகையில்;
நன்னர் நெஞ்சத்து = நல்ல மனதில்;
இன் நசை வாய்ப்ப = இனிய [முக்தி அடையும்] விருப்பம் நிறை வேறும்படி;

இன்னே பெறுதி நீமுன்னிய வினையே            66
இப்பொழுதே நீ விரும்பிய செயலின் பயனைப் பெறுவாய்.

You will get your wish fulfilled right now.

இன்னே பெறுதி = இப்பொழுதே பெறுவாய்;
நீ = நீ;
முன்னிய = விரும்பிய;
வினையே = செயலின் பயனை;

             [மதுரை வருணனை]
                [Description of Madurai] 

செருப் புகன்றுஎடுத்த சேண்உயர் நெடுங்கொடி         67   
போரினை விரும்பி வருவாரை வரவேற்க ஏற்றிய, மிக உயரமான நீண்ட  கம்பத்தின் மீது பறக்கும்  போர்க் கொடிகள்,

Tall war flags flying on high poles, welcoming those who want a war,

செரு புகன்று = போரினை விரும்பி;
எடுத்த = ஏற்றிய;
சேண் உயர் - 
மிக உயரமான;
நெடுங்கொடி =  கம்பத்தின் மீது பறக்கும் நீண்ட கொடிகள்;

 வரிப்புனை பந்தொடு பாவை தூங்க         68
நூலால் வரிந்து கட்டிய பந்தும் பொம்மையும் (அறுக் வல்லமையுள்ள எதிரிகள் இல்லாத காரணத்தினால்) சும்மா தொங்கிக் கொண்டு கிடக்க;

A ball and a doll hanging on a string (due to the absence of powerful enemies to wage a war); 

வரிப்புணை  = நூலால் வரிந்து கட்டப்பட்டுள்ள;
பந்தொடு = பந்தோடு;
பாவை = பொம்மை;
தூங்க = தொங்கிக்கொண்டிருக்க;

குறிப்பு:
எல்லாப் பகைவர்களையும் வென்ற வலிமை மிக்க பேரரசர்கள், பகைவர்களைப் பெண்களாகக் கருதி, அரண்மனை வெளிவாயிலில் பந்தும் பாவையும் கட்டித் தொங்கவிட்டிருப் பார்களாம். பகைவர்கள் வரின், பந்தையும் பாவையையும் எடுத்துக் கொண்டு விளையாடலாம் என்ற கருத்தில் இவ்வாறு செய்வார்களாம். போரிட முன்வருவோர் பந்தையும் பாவையையும் அறுத்துப் போரிட முன்வரவேண்டும்.

The mighty kings, who overcame all their enemies, likened the potential enemy to be  women and hung a ball and a doll on the outside of the palace gate. Weak enemy, (like a woman) can play with the ball and the doll. Those who come forward to fight must cut the ball and the doll.

பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்        69
பகைவரையெல்லாம் அழித்து விட்ட (காரணத்தால்), போர் என்பதே அற்றுப் போன பெருவாயிலையும்,

After defeating all the enemies the big gateway to the palace remains warless.

பொருநர்  = பகைவரையெல்லாம்;
தேய்த்த = அழித்து விட்ட (காரணத்தால்);
போர்  = போர் என்பதே அற்றுப் போன;
அருவாயில் = பெருவாயிலையும்;

திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து             70
திருமகள் (லட்சுமி) அமர்ந்துள்ள, குற்றம் தீர்ந்த கடைத்தெருக் களையும்;

Lakshmi, goddess of wealth, being there majestically,  in streets lined with shops;

திரு வீற்றிருந்த = திருமகள் (லட்சுமி) அமர்ந்துள்ள;
தீது தீர் = குற்றமற்ற;
நியமம் = கடைவீதிகள்;

மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்           71
மாட மாளிகைகள் மிகுந்த மற்றத் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்குப் பக்கத்தில் உள்ள,

On the west side of Madurai, there are many other streets with mansions and beautiful houses.

மாடம் மலி = பல மாட மாளிகைகள் உள்ள;
மறுகு = வீதிகள்;
கூடல் = மதுரை மாநகர்;
குடவாயின் = மேற்குப் பக்கத்தில்;

[இந்நூலாசிரியர், நக்கீரர், மதுரையில் வாழ்ந்தவர்]
[The author of this book Nakirar lived in Madurai].


                                                [திருப்பரங்குன்றம் வருணனை
                                      [Description of Thiruparankundram]

இருஞ்சேற்று அகல்வயல்விரிந்து வாய்அவிழ்ந்த         72
கரிய சேறு உள்ள பரந்த வயலிலே விரிந்து மலர்ந்த;

Black mud spreading in the broad paddy fields with blossoms;

இருஞ்சேறு = கரிய சேறு;
அகல் வயல் = பரந்த நெல் வயல்;
விரிந்து = விரிந்து;
வாய் அவிழ்ந்த = மலர்ந்த;

முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்           73
முள் உள்ள தண்டினை உடைய தாமரை  மலர் இரவில் தூங்கியும் விடியற்காலையில் விழித்து,

The thorny stemmed lotus flower wakes up at dawn, after sleeping at night.

முள்தாள் தாமரை = முள் உள்ள தண்டினை உடைய தாமரை  மலர்;
துஞ்சி = உறங்கி;
வைகறை = விடியற் காலையில்;


தாமரை மலர்


கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்            74
தேன் கமழும் நெய்தல் பூக்களில் ஆரவாரித்து, சூரியன் உதித்த  பின்னர்,

After the sun rises, honey bees hum and swarm over the 'Neelambal' ((Nymphaea nouchali))flowers.

கள்கமழ் = தேன் கமழும்;
நெய்தல் = 
நீலாம்பல்; 
ஊதி = மொய்த்து ஆரவாரித்து;
எல்பட = சூரியன் உதிக்கும் நேரத்தில்;

 

நெய்தல் மலர்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்             75
கண்போல் மலர்ந்துள்ள விரும்பச் செய்யும் சுனைகளிற் பூத்த பூக்களிலே;

The flower buds opened like the eye at springs and water pools;

கண்போல் மலர்ந்த = கண்போல் மலர்ந்துள்ள;
காமரு (காமம் வரு) = விரும்பச் செய்யும்;
சுனைமலர் = சுனைகளிற்  பூத்த பூக்களிலே; 

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்            76
அழகிய சிறகுடைய வண்டுகளின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும்,

Bees with beautiful wings flock and drone on beautiful flowers,

அஞ்சிறை = அழகிய சிறகுடைய;
வண்டின் = வண்டுகளின்;
அரி = அழகு;
கணம் = கூட்டம்;
ஒலிக்கும் = ஆரவாரிக்கும்;

குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதான்று           77
திருப்பரங் குன்றத்திலே விரும்பி  யிருத்தலையும் தன்னுடைய செயலாகக் கொண்டவன் முருகன்; அல்லாமலும்,

Murugan, desires to abide in Thiruparankundram  Not only that;

குன்று = திருப்பரங்குன்றம்;
அமர்ந்து  
உறைதலும் = அமர்ந்திருத்தலை;
உரியன் = தன் செயலாகக்கொண்ட முருகன்.
அதான்று = அது  மட்டுமல்லாமல்;

திருமுருகாற்றுப்படை 2
Thirumurugatrupadai 2


 திருச்சீரலைவாய் [திருச்செந்தூர்]

 [முருகப்பெருமானின் யானை]
[ Murugan's elephant]
(78-82)

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்             78
கூர்மையான அங்குசம் குத்திய ஆழ்ந்த அடையாளம் கொண்ட நெற்றியில்,

(Elephant's) Forehead marked with a sharp puncture of the goad,

வைந்நுதி = கூர்மையான அங்குசம்;
பொருத = குத்திய;
வடு = தழும்பு;
ஆழ் = ஆழமான;
வரி = அடையாளம்;
நுதல் = நெற்றி;

வாடா மாலை ஓடையொடு துயல்வர                    79
வாடாத பொன் மாலை நெற்றிப் பட்டத்தோடு தொங்கி அசைய;

The golden garland that never wilts, moves with the ornament on the forehead;

வாடா மாலை =  வாடாத  பொன் மாலை;
ஓடை = நெற்றிப் பட்டம்;
துயல்வர = அசைய;

யானையின் நெற்றிப் பட்டம்

படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை             80
வேகமான நடையினால் யானையின் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்கும்;

The bells hanging on either side of the elephant will alternately chime due to the fast pace of its walking;

படுமணி இரட்டும் மருங்கின் = யானையின் இரு பக்கங்களிலும் தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்கும்;
படுமணி = தாழ்ந்து தொங்கும் மணிகள்;
இரட்டும் = இரண்டும்;
மருங்கு = பக்கம்;
கடு நடை = வேகமான நடை;

கூற்றத் தன்ன மாற்றஅரு மொய்ம்பின்           81
எமனை ஒத்த, வெல்வதற்கு அரிய வலிமையினையும் உடைய;

With the unsurpassable strength, like that of the god of death;

கூற்றம் = எமன்;
அன்ன = ஒத்த;
மாற்றஅரு = வெல்வதற்கு அரிய;
மொய்ம்பு = வலிமை;

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு          82
காற்று எழும்புவது போல் வேகமாக செல்கிற யானையின் மேல் இருந்து கொண்டு;

Seated on top of the elephant that goes as fast as the wind;

கால் = காற்று;
கிளர்தல் = எழும்புவது;
அன்ன போல;
வேழம் = யானை;
மேல் = மேல்;
கொண்டு= இருந்து;

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய          83
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி          84

ஐவகை வடிவுடன் வேலைப்பாடு நிறைந்த (முருகனின்வெவ்வேறு நிறமுடைய அழகான மணிகள் கொண்ட மகுடம்;

(Murugan's) Crown with beautiful workmanship and jewels of different colors and of five different shapes;

ஐவேறு = ஐவகை;
உருவின் = வடிவுடன்;
செய்வினை = வேலைப்பாடு;
முற்றியநிறைந்த;
முடியொடு = மகுடத்தோடு;
விளங்கிய = ஒளி வீசும்;
முரண்மிகு திருமணி = வெவ்வேறு நிறமுடைய அழகான மணிகள்;

மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப             85
மின்னலை ஒத்த பிரகாசத்துடன் தலையில் பொலிவுதர,

Shining on the head with lightning-like brightness,

மின் உறழ் = மின்னலைப் போல்;
இமைப்பு = பிரகாசிக்க;
சென்னி பொற்ப = தலையில் பொலிவுதர;

நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலங்குழை    86
ஒளிவீசி அசைகிற வேலைப்பாடு நிறைந்த பொன்னாலாய காதணிகள்,

Swaying gold earrings with fine workmanship,

நகை தாழ்பு = ஒளி பொருந்தி;
துயல்வரூஉம் = அசையும்;
வகைஅமை = வேலைப்பாடு நிறைந்த;
பொலங்குழை = பொன்னாலாய காதணி;

சேண்விளங்கு இயற்கை வாள்மதி கவைஇ            87
நெடுந் தூரத்தில் பிரகாசித்துத் தோன்றும் இயல்புடைய சந்திரனைச் சுற்றியிருக்கும்,

Surrounding the moon, which shines in the distance,

சேண் விளங்கு = நெடுந் தூரத்தில் பிரகாசித்துத் தோன்றும்;
இயற்கை = இயல்புடைய;
வாள் மதி = பிரகாசிக்கும் சந்திரன்;
கவைஇ = சுற்றி;

அகலா மீனின் அவிர்வன இமைப்ப            88
நீங்காத நட்சத்திரங்கள் போன்று பிரகாசமாய் ஒளிவீச,

Shining brightly like unceasing stars,

அகலா மீனின் = நீங்காத நட்சத்திரங்களைப் போன்று;
அவிர்வன இமைப்ப = பிரகாசமாய் ஒளிவீச;

தாஇல் கொள்கைத் தம்தொழில் முடிமார்            89
குற்றமற்ற குறிக்கோளுடன் தம் நோன்புகளை  செய்து முடிக்கும்,

Completing their unblemished goal of their vows,

தாஇல் = குற்றமற்ற;
கொள்கை = குறிக்கோள்
தம் தொழில்  = தம் நோன்புகளை;
முடிமார் = செய்து முடிக்கும்;

மனன்நேர்பு எழுதரு வாள் நிறமுகனே             90
தவத்தோரின் உள்ளத்தில் தோன்றுகிற நல்லொளியும் செந்நிறமும் மிக்க முகங்களுள்,

His bright red colored faces appearing directly in their minds.

மனன் நேர்பு எழுதரு = மனத்தில் தோன்றும்;
வாள் நிற முகனே = ஒளிமிக்க செந்நிறமான முருகனின் முகங்களில்;.

மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்க             91
அடர்ந்த இருள் சூழ்ந்த பெரிய உலகம் குற்றமற்று இருக்க,

The great world surrounded by darkness remains blameless,

மாஇருள் = அடர்ந்த இருள்;
ஞாலம் = உலகம்;
மறு இன்றி = குற்றமற்று;
விளங்க = இருக்க;

முதலாவது முகம் 

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;             92
ஒருமுகம் பல கதிர்களை வீசிக் கொண்டிருக்கிறது

One face is emitting many rays;

பல்கதிர் = பலவேறு கதிர்களை;
விரிந்தன்று = வீசிக் கொண்டிருக்கிறது;
ஒருமுகம் = ஒருமுகம்;

இரண்டாவது முகம்  

ஒருமுகம் 

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி            93
மற்றொரு முகம், அன்பர்கள் புகழ்ந்து துதிக்க இனிது பிரகாசித்து இருக்கும்.

Another face will shine sweetly while being praised and glorified by the devotees.

ஆர்வலர் = அன்பர்கள்;
ஏத்த = துதிக்க;
அமர்ந்து = இருந்து;
இனிது = இனிது;
ஒழுகி = பிரகாசித்து;

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே;        94

(ஒருமுகம் அன்பர்மேல் உள்ள) காதலால் மகிழ்ந்து அவர் வேண்டும் வரங்களை அளிக்கின்றது.

One face appreciating the dedication of the devotees gives them whatever they need.

காதலின் காதலால்;
உவந்து மகிழ்ந்து;
வரம் கொடுத்தன்றே = பக்தர்கள் வேண்டும் வரங்களை அளிக்கின்றது;

மூன்றாவது முகம்
ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ             95
 மூன்றாவது முகம், மந்திர விதிப்படி மரபு முறை தவறாது செய்கின்ற;

The third face, (acknowledges) the sacrifices performed according to the scriptures and tradition;

ஒருமுகம் = ஒருமுகம்;
மந்திர விதியின் = மந்திர விதிப்படி;
மரபுளி வழாஅ = மரபு முறை தவறாது;

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மேஒருமுகம்           96
அந்தணர்களுடைய யாகத்தை ஏற்று மகிழும் ஒருமுகம்;

One face is pleased while acknowledging the sacrifices offered by the priests;

அந்தணர் வேள்வி அந்தணர்களுடைய யாகத்தை;
ஓர்க்கும் = ஏற்று மகிழும்;

நாலாவது முகம்
 
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்            97

வேறொருமுகம், (எவராலும் உணர்த்த முடியாமல்) எஞ்சிய மெய்ப்பொருள்களை  அறிய விரும்பிய சான்றோர் களிப்புறும்படி ஆராய்ந்துணர்ந்து;

Where the learned want to understand things that were not explained in the scriptures, those things are researched to the delight of the scholars and;

எஞ்சிய பொருள்கள் = எவராலும் உணர்த்த முடியாமல்  இருக்கும் மெய்ப் பொருள்கள்;
ஏம்உற = சான்றோர் களிப்புறும்படி ஆராய்ந்துணர்ந்து
நாடிவிரும்பி;

திங்கள்போலத் திசை விளக்கும்மே; ஒருமுகம்          98

ஐந்தாவது முகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி                         99
சந்திரன் எல்லாத் திசைகளிலும் இருளை அகற்றிப் பிரகாசித்துக் கொண்டிருபது போல,  இருளை அகற்றி மெய்ப் பொருளை உணர்த்தி கொண்டிருக்கிறது  மற்றொரு திருமுகம்எதிரிகளை (அரக்கர்க
ளை) ஒழித்து, மேலும் செல்லுகின்ற போர்முனையை இல்லாமல் செய்து, 

Just as the moon shines in all directions to dispel darkness, so does (the Lord) dispels ignorance by conveying the true meaning of the scriptures. His one face destroys the enemies (giants) and disposes off the battlefield,

திங்கள்போல = சந்திரனைப்போல;
திசை = எல்லாத் திசைகளிலும்;
விளக்கும்மே = விளக்கிக் கொண்டிருக்கும்;
செறுநர் = எதிரிகள்;
தேய்த்து = ஒழித்து;
செல்சமம் =  செல்லுகின்ற போரில்;
முருக்கி = கொன்று  இல்லாமல் செய்து ;

 கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே; ஒருமுகம்             100
கோபம் கொண்ட நெஞ்சோடு போர்க்கள வேள்வியைச் செய்விக்கின்றது, ஒருமுகம்.

With anger (for the purpose of eliminating evil) one face gets the battlefield sacrifice performed.

கறுவுதல் = [தீமையை அழிப்பதற்காக] கோபித்தல்;
நெஞ்சமொடு = நெஞ்சோடு;
களம் வேட்டன்று = போர்க்கள 
வேள்வியைச் செய்விக்கின்றது;

ஆறாவது முகம்

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்             101
ஒருமுகம், குறவரின் இளமகளாகிய கொடிபோன்ற இடுப்பினையுடைய வள்ளி அம்மையார்;

One face is with Valli Ammai who has a creeper-like thin waist, the daughter of a mountain tribe;

ஒருமுகம்ஒருமுகம் ;
குறவர் மடமகள் குறவரின் இளமகளாகிய வள்ளி அம்மையார்;
நுசுப்பு = இடை;
கொடிபோல் நுசுப்பின்  = பூச்செடி போன்ற மெல்லிய இடையை உடைய;

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே            102
மென்மை மிக்க வள்ளியொடு நகைத்து மகிழும்;

Laughs and enjoys with tender Valli Ammai;

மடப்பம் = மென்மை;
மடவரல் = பெண்;
வள்ளியொடு = வள்ளியொடு;
நகை அமர்ந்தன்றே = நகைத்து மகிழும்;

ஆங்கு அம்மூஇருமுகனும் முறைநவின்று ஒழுகலின்   103
அவ்வாறாக அந்த ஆறு முகங்களும் முறையுடன்  அச்செயல்களைச் செய்து ஒழுகுவதால்,

As such, the six faces function in a systematic manner performing their respective duties,

ஆங்கு = அங்கு;
அம்மூஇருமுகனும் = அந்த ஆறு முகங்களும்;
முறை நவின்று = முறையுடன் செய்து;
ஒழுகலின் = ஒழுகுவதால்;

ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்   104
அழகிய பெருமை மிக்க மார்பிலிருந்து மாலை தாழ்ந்து தொங்கும்;

The garland hangs down the beautiful and proud chest;

ஆரம் = மாலை;
தாழ்ந்த  = தாழ்ந்த;
அம் = அழகிய;
பகடு = பெருமை மிக்க;
மார்பின் = மார்பிலிருந்து;

செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு  105
சிவந்த அழகு வரிக் கோடுகளைப் பெற்றுள்ள, வலிமையுடைய, சுடர்விடு கின்ற,

Strong with beautiful reddish lines (streaks) and shining,

செம்பொறி வாங்கிய = சிவந்த  வரிகள்  கொண்ட; 
மொய்ம்பு = வலிமை;
சுடர் விடுபு = சுடர்விடு கின்ற;

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்  106
அதிக புகழ் நிறைந்து வளைந்து நீட்டி இயங்குகிற நிமிர்ந்த தோள்களுடன் கூடிய;

Being very famous and with curved, upright and elongated shoulders; 

வண்புகழ் = அதிக புகழ்;
நிறைந்து = நிறைந்து;
வசிந்து = பிளந்து;
வாங்கு நிமிர் தோள் = நிமிர்ந்து நிற்கும் தோள்;


       [முதல் இரு கைகள்]
[First two hands]

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை  107
விண்ணில் இயங்கும் தேவர்களைக் காக்க (வேலை) ஏந்திய நிலையில் உள்ளது ஒருகை;

One hand (with spear in it) is in a position to protect the Devas (gods) roaming in the sky(heaven);

விண் செலல் மரபின் ஐயர் = வானத்தில் உலவும் வழக்கத்தைக் கொண்ட தேவர்கள்;
ஏந்தியது
(வேலைஏந்தியது;
ஒருகை = ஒருகை;

உக்கம் சேர்த்தியது ஒருகை;    108
இடுப்பில் ஊன்றியுள்ளது மற்றொருகை.

Another hand is at the waist.

உக்கம் = இடுப்பு;
சேர்த்தியது = ஊன்றியுள்ளது;

                    [இரண்டாவது இரு கைகள்] 
         [Second Two Hands]

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதுஒருகை  109
நன்மை செய்கின்ற அழகு மிக்க ஆடையணிந்துள்ள துடையின் மேலே தொங்கவிட்டிருப்பது ஒருகை;  

One hand rests on the well-dressed thigh ready to do good (to the devotees);

நலம்பெறு = நன்மை செய்கின்ற;
கலிங்கம் =  ஆடை;
குறங்கு = தொடை;
மிசை = மேலே;
அசைஇயது = இருந்தது;

அங்குசம் கடாவ ஒருகை; இருகை             110
(யானையை) அடக்குவதற்காக அங்குசம் பிடித்திருப்பது ஒருகை.

One hand holds a goad to control the elephant.

அங்குசம் = யானையை அடக்குவதற்காகப் பாவிக்கப்படும்  ஒரு கருவி;
கடாவ = செலுத்த;

                   [மூன்றாம் இரு கைகள்]
               [Third two hands]

ஐஇரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப; ஒருகை           111
அழகிய பெரிய கேடயத்தை ஏந்தி நிற்க ஒருகை; வேலை வலமாகச் சுழற்ற மற்றொரு கை.

One hand carries the beautiful large shield; Another hand to rotate the sphere right.

ஐஇரு வட்டம் = அழகான பெருமை பொருந்திய கேடயம்;
எஃகு = வேல்;
வலம் திரிப்ப = வலமாகச் சுழற்ற;

              [நான்காம் இரு கைகள்]
           [Fourth Two Hands]

மார்பொடு விளங்க;  ஒருகை         112
ஒருகை மார்போடு பொருந்தித் திகழ;

One hand is placed on his chest;

மார்பொடு விளங்க = மார்போடு பொருந்தித் திகழ;

தாரொடு பொலிய;  ஒருகை         113
மற்றொன்று மாலையுடன் விளங்க;

Another touches the garland. 

தாரொடு பொலிய = மாலையுடன் விளங்க;

              [ஐந்தாவது இரு கைகள்]
     [Fifth two hands]

கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;  ஒருகை         114
ஒருகை கீழ்நோக்கித் தொங்கும் வளையல் அணியுடன் [கைகளை மேலே உயர்த்தும்போது] மேல் நோக்கிச் சுழல;

One hand has the bangle hanging downwards and when the arm is raised upwards the bangle rotates upwards;

கீழ்வீழ் தொடி = [கைகளை மேலே உயர்த்தும்போது] கீழ்நோக்கி  நழுவும் கையில் அணியப்பெற்ற அணிகலனாகிய வளையல்;
மீமிசை = மேலே;
கொட்ப = சுழல;

பாடுஇன் படுமணி இரட்ட;  ஒருகை             115
வேறொரு கை, பாடலுக்கேற்ற ஓசை இனிமையுடன் ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலியெழச் செய்ய;

The other hand, to alternately ring the bell that sounds melodious to the tune of the song;

பாடுஇன் = ஓதப்படும் பாடலுக்கேற்ற இனிய [ஓசை];
படுமணி = ஓசை உண்டாக்கும் மணி;
இரட்ட = ஒலியெழச் செய்ய;

                [ஆறாவது இரு கைகள்]
          [Sixth Two Hands]

நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய;  ஒருகை           116
ஒரு கை நீல நிற வானத்திலிருந்து மிகுந்த மழைத் துளியைப் பெய்விக்க;

One hand to cause rain from the blue sky;

நீல்நிற விசும்பின் = நீல நிற வானத்திலிருந்து;
மலிதுளி = மிகுதியான மழை;
பொழிய = பெய்விக்க;

வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட        117
இன்னொரு கை வானத்துத் தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட,

Another hand to put bridal garland  to the heavenly goddesses,

வான்அர மகளிர்க்கு = வானத்துத் தெய்வ மகளிர்க்கு;
வதுவை = திருமணம், திருமண மாலை;
சூட்ட = சூட்ட;

ஆங்கு அப்பன்னிருகையும் பாற்பட இயற்றி           118
அப்படியாக அந்தப் பன்னிரு கைகளையும் முறையுடன் இயக்கி,

So those twelve hands perform their respective functions properly,

ஆங்கு = மேற்கூறியவாறு;
அப்பன்னிருகையும் = அந்தப் பன்னிரு கைகளையும்;
பாற்பட = முறையுடன்;
இயற்றி = பணி செய்து.

                    [ஆலவாயில் அமர்ந்திருத்தல்
         [Being in Alavai]
     (119-125)

அந்தரப்பல்லியம் கறங்கத் திண்காழ்             119
துந்துபி போன்ற வானோரின் இசைக் கருவிகள் ஒலிக்கவும்,

Heavenly musical instruments like large kettle-drum sound,   

அந்தரப்பல்லியம் = துந்துபி போன்ற வானோரின் இசைக் கருவிகள்;
கறங்க = ஒலிக்க;
திண் காழ் வயிர் = திண்மையான வயிரத்தை உடைய ஊதுகொம்பு;

வயிர்எழுந்து இசைப்ப வால்வளை ஞால            120
வயிரத்தைப் போல வலிய வெண் சங்கு எழுந்து ஒலிக்கவும்,

The white conch, which is as strong as diamond, rises and sounds,

வயிர் = வயிரத்தைப் போல;
எழுந்து = எழுந்து;
இசைப்ப = ஒலிக்கவும்;
வால்வளை = வெண் சங்கு;
ஞாலம் = உலகம்;

உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு            121
வலிமை உடைய இடி போன்ற முரசத்தின் முழக்கத்துடன்,

With the roar of a mighty thunder of drums,

உரம் தலைக்கொண்ட = வலிமை உடைய;
உரும்இடி = முழங்கும் இடி;
முரசமொடு = முரசத்தின் முழக்கத்துடன்;

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ            122
விசும்பு ஆறுஆக விரைசெலல் முன்னி            123
வானத்தின் வழியாக விரைந்து செல்லுதலை நோக்கங் கொண்டு, பல இறகுகளை உடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து கூவி ஒலிக்க;

Aimed at rushing through the sky, the multi-feathered peacock crows from the victory flag;

பல்பொறி = பல இறகுகளை உடைய;
மஞ்ஞை = மயில்;
வெல் கொடி = வெற்றியைத் தரும் கொடி;
அகவ = கூவி ஒலிக்க;
விசும்பு = வானத்தின்;
ஆறாக = வழியாக.
விரைசெலல் = விரைந்து செல்லுதலை;
முன்னி = நோக்கங் கொண்டு;

உலகம் புகழ்ந்த ஒங்குஉயர் விழுச்சீர்            124
அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பே, அதான்று     125
உலகம் புகழ்கிற ஓங்கிய உயர்ந்த சிறந்த பெருமையுடைய (திருச்செந்தூர் ஆகிய) திருச்சீரலைவாய் என்னும் திருப்பதியில்  எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு நிலை பெற்ற தலம் திருச்சீரலைவாய். அல்லாமலும்;

Tiruchirappalli is the abode of Lord Murugan. Tiruchirappalli is also known as Thiruchendur. Not only that;

 உலகம் = உலகம்;
புகழ்ந்த = புகழ்கிற;
ஒங்கு = ஓங்கிய;
உயர் = உயர்ந்த;
விழுச்சீர்அலைவாய் =  
சிறந்த பெருமையுடைய திருச்சீரலைவாய்;
சேறலும் = சென்று;
நிலைஇய = நிலை பெற்ற;
பண்பே = பண்பாகும்;
அதான்று = அல்லாமலும்;

திருமுருகாற்றுப்படை 3 
Thirumurukaaruppadai 3

  திரு ஆவினன்குடி [பழநி]
  Thiru Avinankudi [Palani]

பழநி

 

                     [முனிவர்கள் ர்ணனை
                 [Description of Sages]
         (126-137)
 

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு             126
மரவுரி உடையினை உடுத்தவரும்,

The one who wears the dress made of barks,

சீரை = மரவுரி ஆடை;
தைஇய = உடுத்திய;
உடுக்கை = ஆடை;
சீரோடு = அழகாக;

வலம்புரி புரையும் வால்நரை முடியினர்          127
வலம்புரிச்சங்கு போன்ற வெள்ளிய நரைத்த முடியினைக் கொண்டவரும்,

Who has white gray hair like a conch shell,

வலம்புரி = வலம்புரிச் சங்கு;
புரையும் = ஒக்கும்;
வால் நரை = வெண்மையாக நரைத்த;
முடியினர் = முடியினைக் கொண்டவரும்;

வலம்புரிச் சங்கு

மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்          128
அழுக்கு அற்று விளங்கும் உருவத்தைப் பெற்றவரும்,

The one who has the image of being very clean,

இமைக்கும் = விளங்கும்;
மாசு = அழுக்கு;
உருவினர் = உருவத்தைப் பெற்றவரும்;
மானின் = மானின்;

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்          129
(மானின்) தோல் போர்த்த, தசை குறைந்த மார்பு,

Deer skin-wrapped, emaciated muscular lower chest,

மானின் உரிவை = மானின் தோல்;
தைஇய = போர்த்த;
ஊன்கெடு மார்பு = தசை குறைந்த மார்பு;

என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்             130
[நோன்பு கடைப்பிடிப்பதனால் மெலிந்து] எலும்பு வெளியில் தோன்றும் உடம்பை உடைய வரும்.

Emaciated due to frequent fasting and their bones  become prominent because of lack of flesh surrounding them.

என்பு எழுந்து இயங்கும் = (மார்பு) எலும்பு வெளிப்படுவதைப்  போன்று தோற்றமளிக்கும்;
யாக்கையர் = உடம்பை உடையவர்;
நன்பகல் = பகல் நேரத்திலும்;

பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு          131
(பகல் பொழுதுகள்) பலவும் உணவு உண்ணாதவரும்,

They pass the daytime without food.

பலவுடன் கழிந்த உண்டியர் = உணவு உண்ணாத நோன்பினைப் பல நாட்கள் கடைப்பிடிப்பவர்கள்;
இகல் = பகை;

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்          132
(பகையுடன்) கோபம் தவிர்த்த மனப்பாங்கு உடையவரும்;

They are never angry(even towards enemies).

செற்றம் = கோபம்;
நீக்கிய = தவிர்த்த;
மனத்தினர் = மனப்பாங்கு உடையவரும்;
யாவதும் = எல்லாம்;

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்  133
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு 134
எல்லாம் கற்றவரும் அறியமுடியாத நுண்ணிய அறிவு வாய்க்கப் பெற்றவரும், கற்றவர்க்கெல்லாம் தாம் உயர் எல்லையாக நிற்கும் தலைமை பெற்றவரும்,

They are all-knowing, and endowed with the subtle knowledge of the unknowable. They  are the goal of all the learned.

கற்றோர் = கற்றவரும்;
அறியா = அறியமுடியாத;
அறிவினர் = நுண்ணிய அறிவு உடையவரும்;
கற்றோர்க்குத் = கற்றவர்க்கெல்லாம்;
தாம்வரம்பு = தாம் உயர் எல்லையாக;
ஆகிய = ஆகிய;
தலைமையர் = தலைமை பெற்றவரும்;
காமம் = ஆசை, அவா;

கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை            135
காமத்துடன் கடிய சினத்தையும் நீக்கிய தோற்றம் உடையவரும்,

That they are devoid of bitter anger and lust, which can be seen from their appearance.

கடும்சினம் = கடிய சினத்தை;
கடிந்த = நீக்கிய;
காட்சி = தோற்றம்;
இடும்பை = துன்பம்;

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்            136
(இடும்பை) துன்பம் ஒரு சிறிதும் உணராத இயல்பை உடையவர்கள். மேன்மை உடைய,

They do not experience even a little suffering. Superior, 

யாவதும் = துன்பம் ஒருசிறிதும்;
அறியா = உணராத;
இயல்பினர் = இயல்பை உடையவர்கள்;
மேவர = மேன்மை உடைய;

துனிஇல் காட்சி முனிவர் முன்புக              137
மேன்மை உடைய வெறுப்பில்லாத நல்ல அறிவினை உடைய முனிவர்கள் முன்னே செல்ல,

(Superior,) sages who have good knowledge and devoid of any hatred,  led the way.

துனிஇல் = வெறுப்பில்லாத;
காட்சி = காட்சி;
முனிவர் = முனிவர்;
முன்புக = முன்னே சென்று உட்புக;

                                             [இசை வாணர்கள் வர்ணனை]
                                                              [Description of Musicians]
                                                            (138 – 142)

புகை முகந்தன்ன மாசுஇல் தூஉடை    138
வெண்புகை போன்ற 
மெல்லிய அழுக்கு இல்லாத தூய உடையினையும்,

Pure clothing that is not dirty like white smoke,

புகை முகந்தன்ன = வெண்புகை போன்ற மெல்லிய;
மாசு இல்= அழுக்கு இல்லாத;
தூஉடை = தூய்மையான உடை;

முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்து            139
மொட்டு விரிந்து மலர்ந்த சிறப்புமிக்க மலர் மாலை அணிந்த மார்பினையும்;

And a chest with a distinctive flower garland with wide open blooms;

முகை = மொட்டு;
வாய் அவிழ்ந்த = வாய் திறந்து;
தகை = சிறப்பு;
சூழ் = சுற்றியணிந்த;
ஆகம் = மார்பு;

செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்            140
செவியாலே இசையைச் சேர்த்து அமைத்த வேலைப்பாடு மிகுந்த (யாழின்) நரம்புகளையுடைய,

The strings set by hearing the sound of the string instrument with excellent craftmanship,

செவி = செவியாலே இசையை ஒன்றுபடச்செய்து;
நேர்பு = சேர்த்து ;
வைத்த = அமைத்த;
செய்வுறு = வேலைப்பாடு மிகுந்த;
திவவு = (யாழின்) நரம்புகள்;

நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்            141
நல்ல யாழ் பயின்ற நயமான உள்ளம் உடைய,

Well learned in the use of string instruments and good-natured and polite-hearted,

நல்யாழ் = நல்ல யாழ்;
நவின்ற = பயின்ற;
நயன் = நன்மை, இனிமை, அன்பு;
உடை  = உடைய;
நெஞ்சின் = உள்ளத்தின்;

மென்மொழி மேவலர், இன்நரம்பு உளர             142
மென்மையான மொழி பேசுபவராகிய கந்தருவர் என்னும் யாழ் வல்லுநர் இனிய யாழ் நரம்பை மீட்டி இயக்க,

Soft-spoken expert musicians generating sweet sound from their instruments,

மென்மொழி = மென்மையான மொழி;
மேவலர் = பேசுபவராகிய கந்தருவர்;
இன்நரம்பு = இனிய யாழ் நரம்பை;
உளர = [யாழின் நரம்புகளைக்கொண்டு] இசையை மீட்ட;

யாழ்


நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின்             143
நோய் இல்லாமல் நலமுடன் அமைந்த உடம்பினைப் பெற்றவரும்,

Who has a healthy body without any disease; Mango tree,

நோய்இன்று = நோய் இல்லாமல்;
இயன்ற = நலமுடன் அமைந்த;
யாக்கை = உடல்;
மாவின் = மாமரத்தின்;

அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்            144
ஒளி பொருந்திய மாந்தளிர் போன்ற மேனி உடையவரும்,

Who have smooth body like a mango spruce,

(மாவின்) அவிர் தளிர் = ஒளி பொருந்திய தளிர்;
புரையும் மேனியர் = போன்ற மேனி  உடையவரும்;
அவிர்தொறும் =   பிரகாசிக்கும் போதெல்லாம்;

பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்            145
(பிரகாசிக்கும் போதெல்லாம்) உரைத்த பொன்துகள் பதிந்தது  போன்ற தேமலை உடையவரும்,

They have spots in the skin (due to pigmentation) which glitters as if gold dust has been applied there.

பொன்னுரை = உரைத்த பொன்துகளின்;
கடுக்கும் = போன்ற;
திதலை = தேமல்;
இன்நகை =  இனிய நகை;

பருமம் தாங்கிய பணிந்துஏந்து அல்குல்             146
இனிய ஒளிவீசும் மேகலை யணிந்த, கீழே சரிந்தும் மேலே உயர்ந்தும் அமைந்துள்ள இடுப்பு உடையவரும்,

They are wearing a glowing waist band on their waist that slides below and rises above,

பருமம் = 'மேகலை' எனப்படும் இடுப்பு அணிகலன்;
தாங்கிய = அணிந்த;
பணிந்துஏந்து= கீழே சரிந்தும் மேலே உயர்ந்தும்;
அல்குல் = இடுப்பு;

மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்க             147
களங்கம் அற்ற கந்தருவ மகளிருடன் வந்து குற்றம் இன்றிச் சூழ்ந்து திகழ;

They come surrounded by their wives who are 'Khandaruva' woman (musicians), innocent and immaculate;

சு = குற்றம்;
இல் = அற்ற;
மகளிரொடு = கந்தருவ மகளிருடன்;
மறு = குற்றம்;
இன்றி = இன்றி;
விளங்க = சூழ்ந்து திகழ;

                  [திருமால் வர்ணனை]
                  [Description of Thirumal ]
           (148-151)

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று          148
நஞ்சுடன் ஒடுங்கிக் கிடக்கும் துளையுள்ள வெண்மையான பற்களையும்;

White teeth with holes that contain venom;

கடுவொடு = நஞ்சுடன்;
ஒடுங்கிய = ஒடுங்கிக் கிடக்கும்;
தூம்புடை = துளையுள்ள;
வால் = வெண்மையான;
எயிறு = பற்கள்;

அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்        149
நெருப்பு எனப் பெருமூச்சு எறியும் அஞ்சத்தக்க அதிக சக்தியையும் உடைய;

With a frighteningly fierce energy and fearful sighs like fire;

அழல் என= நெருப்பு என;
உயிர்க்கும் = மூச்சுவிடும்;
அஞ்சுவரு = அஞ்சத்தக்க;
கடுந்திறல் = அதிக சக்தி;

பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்         150
பாம்புகள் அழியும் படி அடிக்கிற பல வரிகள் கொண்ட வளைந்த இறக்கையை உடைய,

Their feathers with many streaks and of curved wings, which beat so fiercely so as to cause destruction to the serpents,

பாம்புபடப் = பாம்புகள் அழியும் படி;
புடைக்கும் = அடிக்கிற;
பல்வரி = பல வரிகள் கொண்ட;
கொடும் = வளைந்த;
சிறை = சிறகுகள்;

புள்அணி நீள்கொடிச் செல்வனும் வெள் ஏறு             151
கருடப் பறவை அலங்கரிக்கும் நீண்ட கொடியை உடைய செல்வனாகிய திருமாலும்,

Then comes Lord Thirumal, the rich man with the long flag that is adorned by a mythical bird called Garuda,

புள் = கருடன் என்னும் பறவை;
அணி = அலங்கரிக்கும்;
நீள்கொடிச் = நீண்ட கொடி;
செல்வனும் = செல்வன், திருமால்;
வெள் ஏறு = வெண்மையான காளை;

குறிப்பு 
கருடன் (Garuda), காசிபர் - வினதை தம்பதியர்க்கு பிறந்த பறவை இனங்களின் அரசன்.  திருமாலின் வாகனமாக அமைந்தவர்.

Note;
Garuda, Born to Kasipar and his wife Vinata, king of the bird species who was Thirumal's vehicle.

கருடன்


                [சிவபெருமான் வர்ணனை]
            [Description of  Lord Shiva]
     (152-154)

வலம்வயின் உயரிய பலர்புகழ் திணிதோள்   152
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண் 153
வெண்மையான இடபத்தை வலப் புறத்தே கொடியாக உயர்த்திய, பலரும் புகழும் திடமான தோள்களை உடைய, (இடப்பாகத்தே) உமையம்மை விரும்பி அமர்ந்துள்ள, இமைக்காத மூன்று கண்களையுடைய,

(Then comes Lord Shiva,) with unblinking three-eyes, raising the white flag of a bull on the right side, with broad shoulders that are praised by many, and with Uma Devi sitting willingly on his left,

வலம்வயின் = வலப் புறத்தே கொடியாக;
உயரிய = உயர்த்திய;
பலர்புகழ் =  பலரும் புகழும்;
திணிதோள் = திடமான தோள்களை உடைய;
உமைஅமர்ந்து = உமையம்மை அமர்ந்துள்ள;
விளங்கும் = திகழ;
இமையா = இமைக்காத;
முக்கண் = மூன்று கண்கள்;

மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்          154
முப்புரங்களை எரித்து அழித்த, வலிமை மிக்க செல்வனாகிய சிவபெருமானும்,

Lord Shiva, the mighty God who burnt and destroyed the three fortresses,

மூஎயில் = ['ஆணவம், கன்மம், மாயை' எனப்படும் மூவகை அக  இருளை குறிக்கும், 'வெள்ளி, பொன், இரும்பு' ஆகியவற்றால் வானில் அசுரரால் கட்டப்பெற்ற] மூன்று கோட்டைகள்';
முருக்கிய = அழித்த;
முரண்மிகு = வலிமை மிக்க;
செல்வனும் = இறைவனாகிய சிவபெருமானு
ம்;

    [இந்திரன் வருணனை]
[Description of Indra]
(155-159)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்             155
(நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளை இயற்றி முடித்த;

With a thousand (100 x 10) eyes and having completed more than a hundred (Vedic) sacrifices;

நூற்றுப்பத்து அடுக்கிய = நூற்றைப் பத்தால் பெருக்கிய, அதாவது 'ஆயிரம்';
நாட்டம் = கண்;
நூறுபல்பல நூறு;

குறிப்பு:

(வேதங்களில் கூறப்பட்டுள்ள) நூறு வேள்விகளைச் செய்தால் இந்திரப் பதவி கிட்டும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

Note

It has been said in the Vedas that if one performs one hundred Yagnas one will attain the position of Indra (king of Devas).

இந்திரன் ஆயிரம் கண்கள்பெற்ற கதை

கவுதம முனிவரின் மனைவி அகலிகை பேரழகி. கற்புக்கரசி. அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று விரும்பினான் இந்திரன். பதிவிரதையான அகலிகையைச் சூழ்ச்சியின் மூலமே அடைய முடியும் என்று நினைத்துப் பூலோகத்துக்கு வந்தான்.

கவுதம முனிவரின் ஆசிரமத்திற்கு முன் வந்து நடுசாமத்தில் சேவல் போல் கூவினான். பொழுது  புலர்ந்துவிட்டது என்றெண்ணி கவுதம முனிவர் ஆற்றங்கரைக்குச் சென்றார். அகலிகையும் எழுந்து தன் பணிகளைச் செய்யத் தொடங்கினாள்.

அந்நேரத்தில் இந்திரன் கவுதம முனிவர் வேடத்தில் உள்ளே நுழைந்தான். ”ஆற்றங்கரைக்குச் சென்று இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டீர்களா?” என்று கேட்டாள். ”இல்லை  ஏதோ பறவையின் ஒலியைக் கேட்டு சேவல் என்று நினைத்து எழுந்துவிட்டேன். இன்னும் பொழுது புலரவில்லை. வா படுக்கலாம்” என்று அருகில் அழைத்து இன்பம் கொண்டான்.

ஆற்றங்கரை சென்ற முனிவர் இருள் விடியாதது கண்டு  தன் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து வீட்டுக்கு வந்தார். கதவைத் தட்டினார்.

முனிவரின் உருவில் இருந்த இந்திரன் சுய உருவம் பெற்று அகலிகையிடம் மன்னிப்புக் கேட்டான். அகலிகை முனிவரின் காலில் விழுந்து  மன்னிப்புக் கேட்டாள்.

முனிவர் "உன் உடம்பெல்லாம் பெண் குறியாக மாறட்டும்” என்று இந்திரனுக்குச் சாபம் கொடுத்தார். இந்திரன் விநாயகப்  பெருமானுடைய  ஷடாட்சமந்தி ரத்தைச் (गणेशाय नमः) செபம் செய்து பெண்குறிகளைக் கண்களாக மாற்றிக்கொண்டான்.

அகலிகையைக் கல்லாகச் சபித்தார். விஷ்ணு  இராமாவதாரம் எடுத்து இங்கு வரும்போது அவர் பாதம் பட்டு விமோசனம் பெறுவாய் என்று கூறினார்.

இக்கதை வால்மீகியின் இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

Story of how Indra got a thousand eyes.

Gautama Sage's wife Agaligai was very beautiful and virtuous. Indra, the wicked god, wanted to have her somehow. He came to the earth thinking that he could have her only by deceiving her.

Indra came in front of the sage's ashram and cried like a rooster in the middle of the night. Gautama Sage went to the river bank thinking that it was already dawn. Agaligai also got up and started doing her chores.

At that time Indra entered the sage's hut in the guise of Sage himself. "Why did you go to the riverbank and return so soon?" She asked. "No, I heard the sound of a bird and woke up thinking it was a rooster. It is not dawn yet. Let's go to bed". He then enjoyed her.

The sage went to the river bank and saw that it was not dawn yet and returned home knowing what had happened by his wisdom. He knocked on the door.

Indra, who was in the form of the sage, changed to his real form and apologized to Agalikai. Agalikai fell at the sage's feet and apologized.

The sage cursed Indra, saying, "Let your whole body have female organs." Indra worshiped Lord Vinayaga and performed japa with his six letter mantra (Ganeshaya Namah) and got the female organs changed to eyes.

The Sage cursed Agalikai to become as a stone. The Sage told her that when Vishnu took the form of Rama and came to the world, and walked on the stone form of Agalikai she would be freed from the curse and get her natural form.

This story is narrated in Valmiki Ramayana.

வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து          156
யாகம் செய்த சிறப்பினையும் போரில் பெற்ற வெற்றியினையும்;  

With the success of performing sacrifices, and the victory in battle;

வேள்வி முற்றிய = யாகம் செய்து முடித்து;
வென்று = வெற்றி பெற்று;
அடு = போர்;
கொற்றத்து = வெற்றி;

குறிப்பு 

இந்திரன் விருத்திரனோடு செய்த போரில் பெற்ற வெற்றி இங்கு குறிப்பிடப்படுகின்றது.

Note

The victory of  Indra's battle with Viruthira is mentioned here.

ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை          157
நான்கு தந்தங்களையும் அழகிய நடையினையும் உடைய;

With four tusks (ivory) and a beautiful walk;

ஈர்இரண்டு ஏந்திய = நான்காக அமைந்த;
மருப்பு = யானைக் கொம்பு;
எழில்நடை = அழகிய நடையினையும்;

தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை          158
தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய;

Lifting up the great long trunk that hangs downwards; 

தாழ் பெருந்தடக்கை = நீண்ட துதிக்கை;
உயர்த்த = மேலே உயர்த்திய;
யானை = யானை;

எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்  159
ஐராவதம் என்னும் வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் அனைத்துச் செல்வங்களையும் உடைய இந்திரனும்,

Indra, who has all the riches sitting on the back of the white elephant called Iravatham,

எருத்தம் ஏறிய = பிடரியின் மீது அமர்ந்த;
திருக்கிளர் செல்வன் = அனைத்துச் செல்வங்களையும் 
உடைய இந்திரன்.

ஐராவதத்தில் இந்திரன்


        [மூவர் வருகையின் காரணம்]
       [Reason for arrival of the three gods]
(160-165)

நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய  160
(முருகனால் சிறைப்பட்டுக் கிடக்கும் நான்முகன் தவிர இந்திரன், நான்முகன். திருமால், உருத்திரன் என்னும்) நான்கு பெரிய தெய்வங்கள் 
உலகத்தை காத்தல் என்னும் ஒன்றையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்து வரவும், 

(Of the four deities who have the goal of protecting the cities to be persistent,)Indra, Brahma, Thirumal, and Rudra, except Brahma who was imprisoned by Murugan),

நாற்பெரும் = நான்கு பெரிய;
தெய்வத்து =  தெய்வங்களுள்;
நன்னகர் = நல்ல நகரங்கள்;
நிலைஇய = நிலைபெற்று இருக்க;

குறிப்பு

நான் முகனை சிறைப் பிடித்தல்

சிவனைத் தரிசிக்கத் தேவர்களுடன் வந்த பிரம்மன் அங்கிருந்த குமரப்பெருமானை அனைவரும் வணங்கத் தான் மட்டும் இவர் இளைஞன்தானே என்று செருக்கடைந்து வணங்காமல் சிவனைத்  தரிசிக்கச் சென்றார். தாமும் சிவமும் பிரிக்க முடியாத ஒன்றே என்பதை உலகிற்கும் பிரமனுக்கும் உணர்த்தும் படியாகப் பிரமனை அழைத்து ஓம் என்னும் பிரணவத்தின் பொருள் என்ன வென்று கேட்கப் பிரமன் தடுமாறினார். இது அறியாமல் படைப்புத் தொழிலைச் செய்வது சரியாகாது எனக்கூறிப் பிரமனைச் சிறையெடுத்தார். பிரமன் செய்துவந்த படைப்புத் தொழிலைத் தாமே மேற்கொண்டார். சிவனின் விருப்பப்படி பிரமனை விடுவித்து மீண்டும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய அனுமதித்தார். சிவன் "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா" என்று கேட்க "குரு-சிஷ்ய பாவனையில் கேட்டால்  நான் சொல்வேன்"  என்றார் முருகன். சிவன் சீடனாகிக் குருவிடம் பாடம் கேட்கும் நிலையில் அமர்ந்தார். குமரன் பிரணவ மந்திரத்தின் பொருளை மிகத் தெளிவாகக் கூறினார்.

 பிராணவப் பொருளை உபதேசித்த தலம் சுவாமிமலை ஆகும். அதனால் முருகனுக்குச் சுவாமிநாதன் என்னும் பெயர் உண்டாகியது.

பாடல்கள் 160 தில் இருந்து 174 வரை பிரமனைச் சிறைமீட்க தெய்வங்களும் தேவர்களும் வேண்டி முருகனிடம் வருவதாக அமைந்துள்ளன.  

 Note

Imprisonment of Brahma by Murugan.

Brahman, who had come with other deities went to see Lord Shiva without showing any respect to Murugan who was there thinking that he was only a small child. Other deities paid their respect to Murugan.

Murugan wanted to make Brahman (as well as the world) realize that Murugan and Shiva are one and the same and inseparable. He called Brahma and asked him for the meaning of Pranava (Om). Brahman did not know the answer. So Murugan put him in prison saying that he should not be doing creation without knowing the meaning of OM. 

Murugan  himself undertook the creation which was done previously by Brahman. At the request of Shiva he freed Brahman and allowed him to resume his creation. Shiva asked Murugan, "Do you know the meaning of Pranava". Murugan replied "I will tell you that if you ask me as a disciple."

Shiva became a disciple and sat listening to the Murugan. Murugan explained the meaning of the Pranava mantra very clearly. This happened in a place called Swamimalai. After this incident Murugan was also called Swaminathan.

Verses 160 to 174 depict the gods and goddesses coming to visit Murugan to pray for release of Brahma form imprisonment.

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்           161
உலகத்தவரைக் காப்பாற்றுவதையே தங்கள் தலையாய 
கொள்கையாகக் கொண்டிருந்து வர;

The deities who have the chief goal of protecting the cities,

உலகம் = உலகத்தை;
காக்கும் = காப்பதை;
ஒன்றுபுரிக்கொள்கை = தலையான கொள்கையாகக் கொண்ட;

பலர்புகழ் மூவரும் தலைவர் ஆக           162
பலரும் புகழும் (திருமால், உருத்கிரன், பிரமன் ஆகிய) மூவரும் தாம் தத்தம் தலைமையினைப் பெற வேண்டியும்;

Praised by many  (Thirumal, Rudra, Brahman) the trio wanted to hold on to  their own leadership;

பலர்புகழ் மூவர் = பிரமன், திருமால், சிவபெருமான்,  ஆகிய நான்கு புகழுக் குரிய தெய்வங்களில் பிரமன் அல்லாத;
தலைவர் ஆக = தாம் தம் தலைமை
ப்  பதவியினைப் பெற வேண்டியும்;

ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி          163
காவலுடைய மண்ணுலகில் வந்து (முருகன் முன்) தோன்றி,

Arriving at the guarded earth and appearing (in front of  Murugan),

ஏம் (ஏமம்) = காவல்;
ஞாலம் தன்னில் = மண்ணுலகில்;
தோன்றி = வந்து (முருகன் முன்) தோன்றி,

தாமரைப் பயந்த தாஇல் ஊழி           164
(திருமாலின் திரு உந்தியில் தோன்றிய) தாமரை மலரில் உண்டாகிய, குற்றம் இல்லாத பல ஊழிகளைப் படைக்கும்,

(Arising from the lotus flower in Thirumal's naval)  creating many innocent aeons,

தாமரை பயந்த = திருமாலின் உந்தித் தாமரையில் உதித்த;
தாஇல் =குற்றம் இல்லாத;
ஊழி = உலகம் அழியும் காலம்;

குறிப்பு
தாஇல் ஊழி: கிரேத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் ஆகிய இந்த நான்கு யுகங்களும் 4,320,000  வருடங்களாகும். இது ஒரு சதுர் யுகமாகும். ஒரு பிரம வருடம் 3,600,000 சதுர் யுகங்கள்கொண்டது. ஒரு பிரமனுடைய  ஆயுள் 100 பிரம வருடங்கள். 

எனவே ஒரு பிரமனுடைய காலத்தில் பல தடவை உலகம் அழிக்கப்பட்டு மீண்டும் படைக்கப்படும். அதனால் பிரமன் பல ஊழிகளைப் படைப்பவன் என்பர்.

Note

Blameless eons: The four a of the Greta Yuga, Thireta Yuga, Duvapara Yuga and Kali Yuga are 4,320,000 years old. This is a square age. A prime year has 3,600,000 square ages. The life span of a Brahman is 100 Brahma years.

So many times in the time of a Brahmin the world will be destroyed and re-created. That is why Brahman is called the creator of many eons.

நான்முக ஒருவற் சுட்டி காண்வர             165
நான் முகனாகிய ஒருவன் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிச் சிறை மீட்க வேண்டி முருகனைக் கண்டுகொண்டிருக்கவும்,

While pointing out to Murugan that Brahma with four faces has been imprisoned, they have come to ask Murugan to free Brahma from jail.

நான்முக ஒருவற் சுட்டி = நான்முகனாகிய  பிரம்மனைக் குறித்து;
காண்வர = கண்டுகொண்டிருக்கவும்;

         [மற்றத்தேவர்களின்  வருகை
[Visit of other (Devas) gods]
(166-174)

பகலில் தோன்றும் இகல்இல் காட்சி   166
பகல் ஒளிபோல் தோன்றும் மாறுபாடு அற்ற ஒளியுடைய,

Shining brightly like the unchanging light of the sun during day time,

பகலில் தோன்றும் = பகல் நேரத்தில் தோன்றும் கதிரவன் போன்றவர்கள்;
இகல் = மாறுபாடு, பகை;
இல் =  அற்ற;
காட்சி = காட்சியினையுடைய;

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு             167
(ஆதித்தர் பன்னிருவர்+உருத்திரர் பதினொருவர்+வசுக்கள் எண்மர் + அசுவினி தேவர் என்னும் மருத்துவர் இருவர் ஆகிய) நான்கு வகையான வெவ்வேறு இயல்புடைய தேவர் முப்பத்து மூவரும், (பதினொரு மூவர் )

With thirty-three deities of four different natures, (eleven three = 11 x 3 = 33,)

[(Atittar twelve, Rudras eleven, Vasus eight and 2 Asuvini devas,  both doctors) Thirty-three of the four types of different natured gods, (eleven trio = 11 x 3 = 33,]

நால்வேறு இயற்கை பதினொரு மூவர் = முப்பத்து மூன்று தேவர்கள்;

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் 168
(ஒன்பதை இரண்டால் பெருக்கிய) பதினெட்டு வகையான உயர்நிலை பெற்ற தெய்வ இனத்த வரும்,

(nine multiplied by two) Eighteen types of higher divine beings,

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலைப் பெறீஇயர் = (9x2) பதினெட்டு கணங்கள்;

 மீன்பூத்தன்ன தோன்றலர் மீன்சேர்பு   169
வளிகிளர்ந்தன்ன செலவினர் வளியிடைத் 170
விண்மீன்கள் பொலிந்திருப்பது போன்ற தோற்றத்தினராயும், விண்மீன்களைச் சார்ந்து காற்று எழுச்சியுற்றது போன்ற விரைந்த நடையினராயும்,

They look like the stars, and they walk as fast as the wind, 

மீன்பூத்தன்ன = விண்மீன்கள் பொலிந்திருப்பதுபோன்று தோன்றுபவராயும்; 
தோன்றலர் = தோற்றத்தினர்;
மீன்சேர்பு = விண்மீன்களைச் சார்ந்து;
வளிகிளர்ந்தன்ன = காற்று எழுச்சியுற்றது போன்ற;
செலவினர் = விரைந்த நடையினர்;
வளியிடை = காற்றிலிருந்து;

தீஎழுந்தன்ன திறலினர் தீப்பட           171
நெருப்பு எழுந்தாற் போன்ற வலிமை யுடையவராயும்,

As strong as a rising fire,

தீ எழுந்தன்ன = நெருப்பு எழுந்தாற் போன்ற;
திறலினர் = வலிமை யுடையவர்;
தீப்பட = நெருப்புப் பிழம்பு தோன்ற;

உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய          172        
இடி இடித்தாற் போன்ற உரத்த குரல் உடையவராயும்

With a voice as loud as thunder;

உரும்இடித்தன்ன = இடி இடித்தாற் போன்ற;
குரலினர் = உரத்த குரல் உடையவர்;
விழுமிய = மதிப்புகள்;

உறுகுறை மருங்கில் தம்பெறு முறைகொண்மார்        173
அந்தரக் கொட்பினர் வந்து உடன்காண                              174

தமக்கு உற்ற குறைபாடுகளினின்றும் தாம் விடுதலை பெறும் வழிமுறையினைத் தேடிக் கொள்பவராயும் அமைந்து வான் வழியே சுழன்று வந்து (முருகனை) ஒன்றுசேரக் கண்டு வணங்கி நிற்கவும்

And those who seeks the means of liberation from their own miserable imperfections, they roam around the sky. They came to see and worship Murugan.

உறுகுறை = உற்ற குறைபாடுகள்;
மருங்கில் = பக்கத்தில்;
தம்பெறு = விடுதலை பெறு;
முறைகொண்மார் = வழிமுறையினைத் தேடிக் கொள்பவர்கள்;
அந்தரக் கொட்பினர் = வான் வழியே திரியும் தேவர்கள்;
வந்து = வந்து;
உடன்காண = ஒன்றுசேரக் கண்டு;

தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நால்           175
குற்ற மற்ற கற்புக் கொண்ட மடந்தையாகிய தெய்வானையுடன் சில நாள்;

Spending some days with Theivanai who has  unblemished chastity, 

தாஇல் = குற்றமற்ற;
கொள்கை = கற்பு கொண்ட;
மடந்தையொடு = மடந்தையாகிய தெய்வானையுடன்;
சில்நால் = சில நாள்;

ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று          176

(பழநி எனப்படும்) திருவாவினன் குடி என்னும் திருப்பதியில் அமர்ந்திருத்தலை முருகன் உரிமையாக உடையவன்; அது அல்லாமலும்;

Murugan is ever present in holy Thiru Avinankudi (called Palani)  which he considers as his rightful place.

Besides that;

ஆவினன்குடி = திருவாவினன் குடி;
அசைதல் = தங்குதல், அமர்ந்திருத்தல்.
உரியன் = உரிமையாக உடையவன்;
அதான்று = அல்லாமலும்;

திருமுருகாற்றுப்படை 4 
Thirumurukaaruppadai 4
திரு ஏரகம் [சுவாமிமலை]
Thiru Eragam [Swamimalai]

சுவாமிமலை

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது           177
(ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட் பித்தல், ஈதல், ஏற்றல் என்னும்) அறுவகையாய் உள்ள செயற் கடமையினின்றும் வழுவாமல்;

Without deviating from their six sacred duties (of  reciting the scriptures, teaching the scriptures, performing sacrifices, making others to perform sacrifices, accepting alms and giving alms);

மூன்று எய்திய இயல்பு = 'ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல்'. ஆகிய அறுவகைப் பணிகளை நிறைவேற்றும் பண்பு;
வழாஅது = வழுவாமல்;

 இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி         178
(தாய்க்குடி, தந்தைக்குடி என்னும்) இருவர் குடியையும் சுட்டிச் சொல்லத்தக்க பல்வேறு பழங்குடிகளில் பிறந்த;

Born into different ancestry with specifiable fathers lineage and mothers lineage of antiquity;

இருவர்ச்சுட்டிய = தாயும், தந்தையும் ஆகிய இருவரின் குலத்தின், அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறிய;
பல்வேறு = பல்வேறு;
தொல்குடி = பழங்குடி;

அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு        179
(அறுநான்கு இரட்டி= 6x 4 x 2=48) நாற்பத்தெட்டு நல்ல இளமை மிக்க ஆண்டுகளே;

(Six times four = 6x 4 x 2 = 48) Forty-eight good young years;

அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு = 6x4 + 6x4 = 48  ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலம்;

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை             180
நல்வழியில் கழித்த அறங்கூறும் கொள்கை கொண்ட;

Having a well-spent life with underlying right behaviour and social order;

ஆறினில் = நல்வழியில்;
கழிப்பிய = கழித்த;
றன்நவில் = அறங்கூறும்;
கொள்கை = கொள்கை;

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து       181
(நாற்சதுரம், முச்சதுரம், வில்வடிவம் என்னும்) மூன்று வடிவாய் அமைத்துக் காக்கும் மூவகைத் தீயாகிய செல்வத்தை உடைய அந்தணர்கள்;

 The three shapes and types of sacrificial fires (square, triangular and arc) are the  wealth of the Brahmins;

மூன்றுவகை = மூன்று வடிவாய்;
குறித்த = குறித்த;
முத்தீ = 'ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' என்னும்  மூவகை வேள்வித் தீ;
செல்வத்து = செல்வம்;

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல      182
இயற்கைப் பிறப்புஅறிவு முதிர்ச்சியின் பின்னர் எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள், நல்ல நேரத்தைக் கணித்துத் தெரிவிக்க,

Twice born priests (natural birth and rebirth after maturity of knowledge)  to predict a good time according to the almanac,

இருபிறப்பாளர் = இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர் எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள்;
பொழுது அறிந்து நுவல = நல்ல நேரத்தைக் கணித்துத் தெரிவிக்க;

ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்      183
ஒரு புரிக்கு மூன்று நூல் வீதம் ஒன்பது நூல்களால் முறுக்கிய மூன்று புரிகள் கொண்ட நுண்ணிய பூணூலுடன்,

Sacred thread consisting of  three strands with three threads in each strand twisted together, (there are 9 threads altogether in the strand.)

ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண் = [ஒவ்வொரு புரியிலும் மூன்று இழைகளைக்கொண்ட] மூன்று புரிகளாலாகிய ஒன்பது இழைகளைக்கொண்ட பூணூல்; ஞாண் = கயிறு;

புலராக் காழகம் புலர உடீஇ      184
தோய்த்து உலராத உடையினை உடம்பிலேயே உலரும்படி உடுத்துக்கொண்டு,

Wearing washed cloth not dry yet, but to  dry while  on the body,

புலராக் = உலராத ;
காழகம் = ஆடையை;
புலர = உலரும்படி;
உடீஇ = உடுத்தி;

உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து             185
தலைமேலே குவித்த கைகளை உடையவராய், முருகனாகிய தன்னைப் போற்றிப் புகழ்ந்து,

With hands folded over his head, praising Murugan himself,

உச்சிக்கூப்பிய கையினர் = தலை உச்சி மீது இரு கைகளையும் குவித்து வணங்குபவர்கள்;
தற்புகழ்ந்து = தன்னைப் புகழ்ந்து;

ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி         186
ஆறு எழுத்துக்களை (ஷடாட்சரம்) உள்ளடக்கிய அரிய மந்திர மறையை;

Reciting the sacred mantra pertaining to Murugan with six letters,

ஆறுஎழுத்து = ஆறு எழுத்து; (ஷடாட்சரம்) 
அடக்கிய = அடங்கிய;
அருமறைக் = அரிய மந்திர மறையை;
கேள்வி = கேட்டு;

ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி = 'சரவணபவ',     அல்லது 'குமாராயநம' என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரம்;

நாஇயல் மருங்கில் நவிலப் பாடி                            187
விரைஉறு நறுமலர் ஏந்தி பெரிதுஉவந்து         188
நாக்கு இயலும் அளவில்  சொல்லிப்  பாடி, மணம் மிக்க நல்ல மலர்களை ஏந்தித் தூவி வழிபட, அவ்வழிபாட்டிற்குப் பெரிதும் மகிழ்ந்து;

Singing (the praise of the Lord)  as many times as the tongue can, offering fragrant and beautiful flowers to the Lord who greatly enjoys that worship;

நாஇயல் = நாக்கு இயலும் அளவில்;
மருங்கில் = அருகில்;
நவிலப் = சொல்லி;
பாடிபாடி;
விரைவுறு நறுமலர் ஏந்தி = நறுமணம் உடைய மலர்களைத் தூவி;
பெரிது உவந்து = மிகவும் மகிழ்ந்து;

ஏரகத்து உறைதலும் உரியன், அதான்று              189
(சுவாமிமலை என்னும்) திரு ஏரகம் என்னும் திருப்பதியில் உறைதலை முருகன் உரிமையாகக் கொண்டவன்.  அல்லாமலும்,  

Murugan considers his right to reside in Tirupati (also known as Swamimalai also called  Thiru Eragam.)

 Besides that,

ஏரகத்து உறைதலும் உரியன் = திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும் உரிமையுடைய முருகன்;
அதான்று = அல்லாமலும்;

திருமுருகாற்றுப்படை 5
Thirumurugatrupadai 5   
குன்றுதோறாடல்
Kunrutoratal 
திருத்தணிகை மலை (குன்றுதோறாடல்)

பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன்          190 
(முருகனைப்போல் கோலம் புனைந்து கையில் வேலுடன் தோன்றும்) வேலன் எனப்படுபவன், பசுமையான கொடியாலே மணமுள்ள பலவகைக் காய்களை அரையில் வைத்து;

Velan dresses like Murugan with a spear in his hand  and wears a green creeper around his waist and tucks  in a variety of fragrant pods (like nutmeg) there;

பைங்கொடி = பசுமையான கொடி;
நறைக்காய் = நறுமணம் உடைய சாதிக்காய்;
இடை இடுபு = அரையில் வைத்து;
வேலன் = [முருகனைப் போல] கையில் வேலை உடையவன்;

அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு        191
அழகு பொருந்திய தக்கோலக் காயைக் கலந்தும் காட்டு மல்லிகையுடன்;

With wild jasmine mixed with a beautiful matching betel nut;

அம்பொதிப்புட்டில் விரைஇ = அழகான கூடை போன்ற தக்கோலக்காயினை இணைத்து;
தக்கோலக் காய்  = பாக்கு;
குளவியொடு = மலைமல்லிகையோடு;

புட்டில் = Bottle;



காட்டு மல்லிகை


தக்கோலக் காய் 


வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்        192
வெண்டாளி மலரையும் சேர்த்துக் கட்டி மாலையை அணிந்தவனாய்;

Wearing a garland of 'vendali' (White Catamaran) flowers;

வெண்கூதாளம் = வெண்டாளி;
தொடுத்த = சேர்த்துக் கட்டின;
கண்ணியன் = மாலையை அணிந்தவன்;

வெண்டாளி 

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்        193
மணமிக்க சந்தனம் பூசிய ஒளி பொருந்திய மார்பினோடு;

With fragrant sandalwood coated bright chest

நறுஞ்சாந்து = நறுமணமிக்க சந்தனம்;
அணிந்த = பூசிய;
கேழ் கிளர் = ஒளி பொருந்திய;
மார்பின் = மார்பினோடு;

கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்        194
கொடிய செயலுடைய வலிமை மிக்க வில்லால் கொலைத் தொழில் புரிகிற காட்டுக் குறவர்கள்;

Hunters in the forests who are used to  killing with their mighty bow;

கொடுந்தொழில் = கொடிய செயலுடைய;
வல்வில் = வலிமை மிக்க வில்லால்;
கொலைஇய = கொலைத் தொழில் புரிகிற;
கானவர் = காட்டுக் குறவர்கள் (
வேடர்);

 நீடுஅமை விளைந்த தேக்கள் தேறல்   195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து  196
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர  197
நீண்ட மூங்கில் குழாயில் ஊற்றிப் பதப்படுத்திய தேனால் ஆன கள்ளின் தெளிவை, மலைப்பகுதியிலுள்ள சிற்றூரில் வாழும் சுற்றத்தாருடன் மகிழ்ந்து உண்டு, தொண்டகம் என்னும் சிறுபறையின் ஒலிக்கு ஏற்பக் குரவை என்னும் கூத்தை ஆட,

Enjoying the alcoholic beverage, processed by pouring honey into long bamboo poles and then clarified, with their relatives in the surrounding villages in the hilly area, and performing a dance (known as 'kuravai') to the beat of drum called 'thondakam'.

நீடுஅமை = நீண்ட மூங்கில்;
விளைந்த =  ஊற்றிப் பதப்படுத்திய;
தேக்கள் தேறல் = தேனால் விளைந்த மது;
குன்றகம் = மலையிடம்;
சிறுகுடிக் கிளை = சிறிய ஊரில் வாழும் சுற்றத்தார்;
மகிழ்ந்து = மகிழ்ந்து;
தொண்டகச் சிறுபறை = தொண்டகம் என்னும் சிறுபறை;
குரவை =  ஒருவகைக் கூத்து.
அயர = ஆட;

குரவை

குரவைக்கூத்து என்பது கூத்தின் ஒரு வகையாகும். இவ்வகைக் கூத்து பழங்காலத் தமிழ்ச் சமூகம் தொட்டு இன்றுவரை வழக்கிலுள்ளது. போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போக்குக்காகவும் குரவைக் கூத்து ஆடப்பட்டு வந்தது. குரவைக் கூத்தினை 'மலை நடனம்' என்று அபிதான சிந்தாமணி குறிக்கின்றது. 

போர்க்காலத்தில் ஆடப்படும் குரவைக் கூத்தில் கோபமும், வீரமும் மிக்குத் தோன்றும். இதனைச் 'சினமாந்த வெறிக்குரவை' என்றும், போரில்லாத காலங்களில் அமைதியான முறையில் நடைபெறும் கூத்தை, தண்குரவை என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.

குரவைக் கூத்தாடும் போது ஒருவரை ஒருவர் தழுவியாடும் வழக்கம் உண்டு. கூத்தில் ஆடும் ஆடவரும் பெண்டிரும் இரண்டிரண்டு பேராகத் தழுவி ஆடுவர். இவ்வகைக் குரவையினை இலக்கியங்கள் தழூஉ என வகைப்படுத்துகின்றன.இருவராகத் தழுவி ஆடும் போது ஆடியபடியே தழுவும் தமது இணையை மாற்றுவர். ஒரே இணையோடு இறுதிவரை ஆடுவதில்லை ஆட்டத்தின் போக்கில் பிணைகள் மாறிக்கொண்டேயிருக்கும். இதனைப் 'பல் பிணைத் தழீஇ' எனத் திருமுருகாற்றுப்படை (216 ல் கீழே காண்க) குறிப்பிடுகின்றது.

Kuravai Koothu is a type of dance. This type of dance has been in vogue since the time of the ancient Tamil community. During a war and when there was a fear of harm, this dance was performed. Abithana Chintamani refers to Kuravai Koothu as a 'mountain dance'.

Anger and bravery can be seen in the dance performed during the war. Purananuru refers to this as the 'Sinamantha Verikuravai'. 'Thankuravai' took place during peaceful times.

It is customary to embrace one another while dancing. The male and female dancers will embrace each other and dance in pairs. The literature classifies this type of dancing was called 'Thaluu'. the same pair does not play to the end. They will change the partners during the course of the dance. The Thirumurukaaruppadi (216 below) refers to this as 'Pal Pinai Thazhi'


[மலையக மகளிரின் அணிவகை]
[ Jewellery of  Mountain Women]

விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்          198
விரலால்தொட்டதனால் மலர்ந்து,  வேறான நறுமணம் உடைய;

(Flowers) with distinct fragrance blooming by being touched by fingers,

விரல் உளர்ப்பு அவிழ்ந்த = விரல்கள் தொடுவதால் மலர்ந்த;
வேறுபடு = வேறான;
நறுங்கான்  = நறுமணம் உடைய;

குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி         199
ஆழமான சுனைகளில் மலர்ந்த வண்டு மொய்க்கும் மலர்களால் தொடுத்த கண்ணி என்னும் ஒருவகை மாலையினையும்;

And a garland, flocked by bees,  made of  flowers that bloom in deep mountain pools;

குண்டு சுனை = ஆழமான சுனை;
பூத்த = பூத்த;
வண்டுபடு கண்ணி = வண்டுகள் மொய்க்கும் மாலை

இணைத்த கோதை அணைத்த கூந்தல்             200
வெவ்வேறு மாலைகளால் இணைக்கபெற்ற மாலையினையும் சேர்த்து அணிந்த கூந்தலுடன்;

With the hair worn along with the garland paired with different garlands;

 இணைத்த கோதை = வெவ்வேறு மாலைகளால் இணைக்கபெற்ற மற்றொரு மாலை;
அணைத்த கூந்தல் = மாலைகளால் சேர்த்துக் கட்டப்பெற்ற கூந்தல்;

முடித்த குல்லை இலையுடை நறும்பூ           201
கட்டிய கஞ்சங் குல்லையொடு,  இலைகள் இடையிடையே  செருகப்பட்டிருந்த நறுமணப் பூங்கொத்துகள்;

White flowers tied with mixed leaves and fragrant flowers.

முடித்த குல்லை = இலையைத் தலைமுடி மீது சூடியது போன்று விளங்கும் கஞ்சங்குல்லை;
[கஞ்சங்குல்லை (Indian hemp) தனிச்செடி. துளசிக்கும் குல்லைக்கும் ஆங்கிலத்தில் பேசில் (Basil) என்றே பெயர்.  துளசி இலைமணத்தாற் சிறப்புற்றது. குல்லையின் இலைக்கொத்தும் மகளிர் இலையுடைக்குப் பயன் பட்டுள்ளது. இது தற்காலத்தில் கஞ்சாங் கோரை எனப்படும்.]
இலை உடை நறும்பூ = இலைகள் இடையிடையே  செருகப்பட்டிருந்த நறுமணப் பூங்கொத்துகள்;

கஞ்சங்குல்லை

செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு        20
சிவந்த அடிப்பகுதியை உடைய 
கடம்பு மரத்தின் வெள்ளிய பூங்கொத்துக்களை இடையிடையே இட்டு;

Interspersed with white inflorescences of 'Katambu' tree with red trunk;

செங்கால் = சிவந்த அடிப்பகுதியை உடைய;
மராத்த = கடம்பு மரத்தின்;
வால் இணர் = வெண்மையான பூங்கொத்தினையும்;
இடை =  நடுவில்;
இடுபு = இட்டு;

சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை        203
வண்டுகள் தேன் அருந்தும்படித் தொடுத்துச் செய்த பெரிய குளிர்ந்த சிறந்த தழை உடை;

Waist skirt made of best cool and big foliage (interspersed with flowers) that attract bees seeking honey;

சுரும்பு உண = வண்டுகள் [மலரில் உள்ள தேனை] உண்ணுமாறு;
தொடுத்த = தொடுத்துச் செய்த;
பெருந்தண் மரத்தழை = பெரிய குளிர்ந்த அழகிய 
மரத்தின் இலைகளாலான ஆடை;

திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ        204
சிறந்த மணிகளாலான மாலை அணிந்த இடுப்பில் அசையும் படி உடுத்து,

Wearing the skirt (mentioned in the previous line) which moves with the steps, on the waist, bedecked with a chain made of best gem stones,

திருந்து = சிறந்த;
காழ் = மணிகளாலான அணிகலன் அணியப்பெற்ற;
அல்குல் = இடுப்பு;
திளைப்ப = பொருந்துமாறு, அல்லது அசையுமாறு;
உடீஇ = உடுத்திய;

மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு             205
மயிலைக் கண்டாற்போன்று தோன்றும் மட நடையையுடைய மகளிருடன் (கூடி);

With young woman who walk like a  peacock;

மயில் = மயிலை;
கண்டன்ன = பார்த்தது போன்ற;
மடநடை = இளமையோடு கூடிய நடையினை உடைய;
மகளிரொடு =   மகளிருடன்;

 [வெறியாடும் வேலன் உருவத்திலே குடிகொண்டுள்ள குமரன் இயல்பு]
                                        [Nature of Kumaran in the form of a dancing Velan]

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்             206

செம்மேனியனாய், செந்நிற ஆடையனாய், சிவந்த அடிமரத்தையுடைய;

Red-bodied, red-clad, (wearing) red-trunked;

செய்யன் = சிவந்த மேனியன்;
சிவந்த ஆடையன் =  செந்நிற ஆடையனாய்;
செவ்வரைச் = சிவந்த அடிமரத்தையுடைய;

செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்         207
அசோகினது குளிர்ந்த தளிர் அசைந்தாடும் காதுகளை உடையவன்;

Wearing cold spruce of Ashoka tree leaves dangling on his ears; 

செவ்வரை = சிவந்த  அடிப்பாகத்தை உடைய;
செயலை = அசோக மரத்தின்;
தண் =  குளிர்ச்சி பொருந்திய ;
தளிர் = தளிர்;
துயல் வரும் = அசையும்;
காதினன் = காதுகளையுடையவன்;

கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்        208
கச்சு கட்டிவனாய், வீரக் கழல் பூண்டவனாய், வெட்சி மாலை சூடினவன்;

Wearing loincloth, an ornament on his leg as a symbol of victory, and a garland of 'Vedsi' flowers on his head;

கச்சு = இடையில் அணியும் ஒருவகை ஆடை;
கழல் = காலில் அணியும் வீரக் கழல்;
செச்சை = சிவந்த வெட்சி மலர்;
கண்ணி = தலையில் அணியும் மாலை;

குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்        209
குழல் இசைப்பவனாய், கொம்பு ஊதுபவனாய், சிறிய பல இசைக் கருவிகளை இசைப்பவனாய்;

(He is a) Flute player, horn player, and a small multi-instrumentalist;

குழலன் = குழல் இசைப்பவன்;
கோடு = ஊதுகொம்பு;
குறும் = சிறிய;
பல்லியம் = பல்வேறுவகை இசைக் கருவிகள்;

தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல்அம் 210
ஆட்டுக் கிடாயும் மயிலும் ஊர்தி யாய் உடையவனாய், குற்றமற்ற அழகிய சேவல் கொடியை உடையவன்,

The one with the sheep and the peacock as vehicle, the one with the unblemished flag of beautiful rooster,

 தகர் = ஆடு;
மஞ்ஞை = மயில்;
புகர் இல் = குற்றம் இல்லாத;
சேவல்அம் = அழகிய சேவல்;
கொடியன் = கொடியை உடையவன்;

கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்   211
கொடி உடையோனாய், உயரமானவனாய், தொடி அணிந்த தோளனாய்;

He carries a flag, is tall,  and wears large ornament of 'thodi' as an armlet over his forearm;

கொடியன் = கொடி உடையோன்;
நெடியன் = உயரமானவன்;
தொடி = தோளில் அணியும் ஒருவகை அணிகலன், வளையல்;
அணி தோளன் = அணிந்த தோளையுடையவன்;

நரம்பு ஆர்த்தன்ன இன்குரல் தொகுதியொடு   212
யாழ் நரம்பை மீட்டுவதை ஒத்த இனிய குரலுடைய மகளிர் குழுவுடனும்;

With a group of women who have sweet voice like the sound from the strings of a harp;

நரம்பு ஆர்த்தன்ன = நரம்புகளால் ஆகிய யாழ் போன்ற இசைக் கருவி ஒலித்ததைப் போல;
இன் குரல் தொகுதி = இனிய குரலினை உடைய மகளிர் கூட்டம்;

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்          213
சிறிய புள்ளி கொண்ட நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய;

Fragrant and cool dress with small dots;

குறும்பொறி = சிறிய புள்ளி;
கொண்ட = கொண்ட;
நறுந்தண் சாயல் = நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய;

மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்  214
இடுப்பிலே உடுத்து நிலம் வரை  தொங்குகிற ஆடையை உடையவனாய்;

wearing a garment hanging from waist down to the ground;

மருங்கில்  = இடுப்பிலே;
கட்டிய = உடுத்த;
நிலம் நேர்பு = நிலத்தைத் தொடுகின்ற;
துகிலினன் = ஆடை உடையவனாய்;

முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி             215
மத்தளம் போன்ற திரண்ட பெரிய கைகளால் பொருந்தத் தாங்கி;

Taking with hands as large as a drum;

முழவு உறழ் = மத்தளம் போன்ற;
தடக்கை = பெரிய கை;
இயல ஏந்தி = பொருந்தத் தாங்கி;

மென்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து          216
மெல்லிய தோளுடைய பல பெண்மான்கள் போன்ற பெண்டிரைத் தழுவிக்கொண்டு அனைவர்க்கும் முகமலர்ந்து இனியது கூறி;

Embracing female deer like many women with slender shoulders, and speaking sweet words to everyone while smiling and being happy;

மென் தோள் = மென்மையான தோள்;
பல்பிணை = பல பெண்மான்கள் போன்ற பெண்டிரை;
தழீஇ = தழுவிக்கொண்டு;
தலைத்தந்து = முகமலர்ந்து இனியது கூறி;

குன்றுதொறு ஆடலும்நின்ற தன்பண்பே, அதான்று         217
மலைகள்தோறும் சென்று முருகப்பெருமானைப்போல் ஆடல் புரிதலும் (அவனுக்கு) நிலைத்த பண்பாகும். 
அல்லாமலும்;

Going to the mountains and dancing like Lord Murugan is an enduring attribute (for him);
besides;

குன்றுதொறு = மலைகள்தோறும் சென்று;
ஆடலும் = ஆடல் புரிதல்;
நின்ற தன்பண்பே = நிலையான குணமேயாகும்;
அதான்று = அல்லாமலும்;
 

குறிப்பு:

குன்று இங்கு திருத்தணிகை மலையைக் குறிக்கும்.

Mountain here refers to 'Thiruththanikai'.

திருமுருகாற்றுப்படை 6 
Tirumurukarruppadai 6
  பழமுதிர்சோலை
 Palamuthircolai

பழமுதிர்சோலை


சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து             218
சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பரப்பி ஆடு அறுத்து;

Spread small millet rice mixed with flowers and cut the goat,

சிறு தினை = சிறிய தினை அரிசி;
மலரொடு = பூக்களுடன்;
விரைஇ = கலந்து;
மறி = ஆட்டுக்கிடாய்;
அறுத்து = அறுத்து;

வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ            219
கோழிக் கொடியுடன் அனைத்தையும் உரிய இடத்தில் அமைத்து;

Set everything in place with the flag depicting rooster;

வாரணக்கொடி = கோழிக்கொடி;
வயிற்பட = தக்க இடத்தில் அமையுமாறு;
நிறீஇ = நிறுத்தி;

ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்          220
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்            221
ஊர்கள் தோறும் நடக்கும் சிறப்பு மிக்க திருவிழாக்களிலும், அன்பர்கள் போற்றி விரும்பும் சிறப்பிடங்களிலும்;

At the special festivals held in the towns and at the special places loved by the devotees;

ஊர்ஊர் கொண்ட = ஊர்கள் தோறும் நடக்கும்;
சீர்கெழு = சிறப்பு மிக்க;
விழவினும் = திருவிழாக்களிலும்;
ஆர்வலர் = முருகப் பக்தர்கள்;
ஏத்த = போற்ற;
மேவரு நிலையினும் = விரும்பி வருகின்ற இடந்தோறும்;

வேலன் தைஇய வெறிஅயர் களனும்  222
முருகன்போல் கோலம் கொண்ட வேலன் மகிழ்ச்சியோடு ஆடும் களத்திலும்;

Velan dressed like Murugan and dancing happily  on the field;

வேலன் தைஇய = வேலன் இயற்றிய;
வெறிஅயர் களனும் = மிகுதியான மகிழ்ச்சியோடு ஆடும்
களத்திலும்;

காடும் காவும் கவின்பெறு துருத்தியும்            223
(வெறியாடுகின்ற) காடுகளிலும், சோலைகளிலும், அழகு மிக்க ஆற்றிடைத் திட்டுக்களிலும்,

In forests, flower gardens, and beautiful aits (small island in the middle of a river or lake),

காடும் காவும் = காட்டிலும் சோலையிலும்;
கவின்பெரு துருத்தியும் = அழகு பொருந்திய;
துருத்தியும் = [சிறு தீவு போன்ற] திட்டுக்களிலும்;

யாறும் குளனும் வேறுபல் வைப்பும்            224
ஆற்றங் கரைகளிலும், குளக்கரைகளிலும், இன்னும் பல வேறு இடங்களிலும்;

On river banks, ponds, and many other places;

யாறும் குளனும் = ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும்;
வேறுபல் = பல வேறு;
வைப்பும் = இடங்களிலும்;

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும்; மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும்;  புதிய பூக்களை உடைய கடம்பு மரத்தினடியிலும்;       225

At the junction where three or four streets meet, and under the 'kadampu' tree with fresh flowers, 

சதுக்கமும் = நான்கு தெருக்கள் சந்திக்கும் சதுக்கத்திலும்;
சந்தியும் = மூன்று தெருக்கள் சந்திக்கும் முச்சந்தியிலும்;
புதுபூங் கடம்பும் = புதிய பூக்களை உடைய கடம்பு மரத்தினடியிலும்;

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்         226
பொது அம்பலங்களிலும், கடவுளாகக் கருதி கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்;

Under a tree in the middle of the town, in public assemblies, and in a pillars planted as a deity;

மன்றமும்= கிராமத்து மக்கள் கூடுமிட த்திலும்;  
பொதியிலும்= ஊர் நடு மன்றமாகிய மரத்தடியிலும்;
கந்து உடை நிலையினும் = கந்து நடப்பட்டுள்ள இடத்திலும்.
கந்து = தெய்வத்தைக் குறிக்கும் தூண், நடுகல்;

கந்து


மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர        227
கோழிக் கொடியோடு பொருந்த அணி செய்து;

Raising the special flag depicting a rooster to match;

மாண்தலை = சிறப்பான முதன்மையுடைய;
கொடி = கோழிக் கொடி;
மண்ணி = நிறுவி, அமைத்து;
அமைவர = நிறைவாக;

நெய்யோடு ஐயவி அப்பி ஐதுஉரைத்து       228
நெய்யுடன் வெண் சிறு கடுகைக் கலந்து அப்பி, அழகிய [முருகப்பெருமானின் பெயரை] மென்மையாக உரைத்து;

Mixing white mustard with ghee and applying it on the pillar depicting Murugan,  and softly saying the beautiful [name of Lord Murugan];

நெய்யோடு = நெய்யுடன்;
ஐயவி = வெண்மையான சிறு கடுகு;
அப்பி = அப்பி;
ஐது உரைத்து = [முருகப்பெருமானின் பெயரை] 
 மென்மையாக உரைத்து;

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி       229
கைகளைக் குவித்து வணங்கி; செழுமையான பூக்களைத் தூவி;

Praying with folded palms and sprinkling with lush flowers;

குடந்தம் பட்டு = கைகளைக் குவித்து வணங்கி; நான்குவிரல்களையும் மடக்கி பெருவிரலை மார்பில் நிறுத்தி வணங்குவது  'குடந்தம்' எனப்படும்; 
கொழு மலர் சிதறி = செழுமையான பூக்களைத் தூவி;

முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇ             230
வேறுபட்ட அமைப்பையுடைய இரண்டு உடைகளை நீளத் தொங்கும் வாட்டத்தில் ஒன்றும் அதன்மேல் குறுக்கு வாட்டத்தில் ஒன்றுமாக ஒருசேர உடுத்து;

Wear two garments of different textures, one on top of the other,  one hanging downwards and the other in a cross section;

முரண்கொள் உருவின் = வெவ்வேறு நிறமுடைய;
இரண்டு = இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக;
உடன் உடீஇ =   ஒருங்கே அணிந்து;

செந்நூல் யாத்து வெண்பொறி சிதறி             231
செந்நிற நூலைக் கையிலே காப்பாகக் கட்டி, வெண்மையான பொரியினைத் தூவி, 

In the hand they tied the red thread of vow and sprinkled the rice puff,

செந்நூல் = சிவப்பு நூல்;
யாத்து = கட்டி, அணிந்து;
 
வெண்பொறி - வெண்மையான பொரியினை;  
சிதறி = தூவி;

மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்             232
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி             233
மிகுதியான வலிமையினையும்  நிலைபெற்ற பெரிய தொடையினையும் உடைய கொழுத்த ஆட்டுக்கிடாயின் இரத்தத்துடன் கலந்த தூய  வெண்மையான அரிசி;

Pure white rice mixed with the blood of fat lamb with abundant strength and large thighs;

மதவலி = மிகுதியான வலிமையினையும்;
நிலைஇய = நிலைபெற்ற;
மாத்தாள் = பெரிய;
கொழுவிடை = தொடையினைய உடைய கொழுத்த  ஆட்டுக்கிடாயின்;
குருதியொடு = இரத்தத்துடன்;
விரைஇய = கலந்த;
தூவெள் அரிசி = தூய  வெண்மையான அரிசி;

சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ             234
சிறுபலியாகப் போட்டுப் பல அரிசிக் கலங்களைப் பரவலாக வைத்து;

Making small offerings, and spreading several rice bowls;

சில்பலி செய்து = சிறுபலி அமுதாக இட்டு;
பல் பிரப்பு இரீஇ = தினை அரிசியைப் பல பாத்திரங்களில் 
இட்டுப் பரப்பி வைத்து;

 சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்து             235
சிறிய பசு மஞ்சளுடன் நறுமணப் பொருள்களையும் தூவித் தெளித்து;

Sprinkling small fresh turmeric along with fragrant items like sandalwood or incense, 

சிறு பசுமஞ்சள் = பச்சை மஞ்சள்;
நறுவிரை = சந்தனம் போன்ற நறுமணமுடைய பொருட்கள்;
தெளித்து = தெளித்து;

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை            236
துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி             237
பெரிய குளிர்ந்த செவ்வலரி மாலையினையும் நறுமண மிக்க குளிர்ச்சியான மற்ற மாலைகளையும் அறுத்து இணையில்லாத வகையில் அவை அசைந்து கொண்டிருக்குமாறு தொங்க விட்டு,

Cut large chrysanthemum garlands and other fragrant cool garlands and leave them hanging so that they do not overlap,

பெருந்தண் கணவீரம் = பெரிய குளிர்ந்த சிவந்த அலரிமாலை [செவ்வலரிப் பூக்களாலாகிய மாலை];
நறுந்தண்மாலை = நறுமண மாலையை; 
அறுத்து = ஒரேஅளவாக  அறுத்து;
துணையற = இணையில்லாத வகையில்;
தூங்க நாற்றி =  [அவை] அசையுமாறு அவற்றைத் தொங்கவிட்டு;



செவ்வலரி
 

நளிமலைச் சிலம்பில் நல்நகர் வாழ்த்தி  238
செறிவான மலைச்சாரலில் உள்ள நல்ல ஊர்கள் வளம் பெறுக என வாழ்த்தி;

Blessing for the prosperity of good towns in the dense mountain range;

நளி மலை சிலம்பில் = செறிந்த மலைப் பக்கத்தில் உள்ள;
நல் நகர் வாழ்த்தி = நல்ல ஊர்களை வாழ்த்தி;

நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி  239
நறுமணப் பொருள்களைத் தூபமிட்டு, மலை நிலத்திற்கு உரிய குறிஞ்சிப் பண்ணைப் பாடி;

Burning incense and singing songs of the hilly tribes;

நறும்புகை எடுத்து = நறுமணம் உடைய புகையக் கையில் எடுத்து ஆராதனை செய்து;
குறிஞ்சி பாடி = குறிஞ்சி நிலத்திற்குரிய பண்ணில் இயற்றப்பெற்ற பாடல்களைப் பாடி;

இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க             240
மலை மீதிருந்து விழும் அருவியின் ஓசைக்கேற்ப இனிய இசை முழங்க;

To the melodious music matching the sound of the waterfall that falls from the mountain;

 இமிழ் = ஒலிக்கும்;
இசை = இசை;
அருவியொடு = அருவியின்;
இன் = இனிய;
இயம் = ஒலி;
கறங்க = ஒலிக்க;

உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்    241
குருதிச் செந்தினைப் பரப்பி குறமகள்
242
பல்வேறு நிறங்களையுடைய பலவகை மலர்களையும் தூவி, [காண்பவர்களுக்கு] அச்சத்தை விளைவிக்கும் வகையில் இரத்தத்தோடு கலந்த சிவந்த தினை அரிசியைப் பரவலாக வைத்து;

They sprinkled with a variety of flowers of different colors and spread the red millet rice mixed with blood in such a way as to frighten [the viewers];

உருவப் = பல்வேறு நிறங்களையுடைய;
பல்பூ = பலவகை மலர்களையும்;
தூஉய் = தூவி;
வெருவர = [காண்பவர்களுக்கு] அச்சத்தை விளைவிக்கும்;
குருதி = இரத்தம்;
செந்தினை = சிவந்த தினை;
பரப்பி = பரவலாக வைத்து;
குறமகள் = வள்ளியம்மை;

முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க  243
முருகன் விரும்பும் (குறிஞ்சி யாழ், துடி, தொண்டகப் பறை போன்ற) இசைக் கருவிகள் இசைத்து, முரண் பட்டவர்கள் பயப்பட;

Playing the musical instruments that Murugan likes (such as harp of the hill tribes and drums), to scare the enemies;

முருகு = முருகன்;
இயம் = விரும்பும் (குறிஞ்சி யாழ், துடி, தொண்டகப் பறை போன்ற) இசைக் கருவிகள்;
நிறுத்து = இசைத்து;
முரணினர் = முரண் பட்டவர்கள்;
உட்க = பயம் ஏற்படுத்த;

    [முருகாற்றுப் படுத்தல் ]
[Leading to Murugan]

முருகுஆற்றுப்படுத்த உருகெழு வியல்நகர்  244
முருகன் அங்கு  எழுந்தருளும்படி வழிப்படுத்திக் கொணர்ந்த, பயபக்தி நிறைந்த பெரிய நகரின்கண்ணே;

Invoking Murugan to go there to the big city full of piety and reverence;

முருகுஆற்றுப்படுத்த = முருகனை வரச் செய்ய;
உருகெழு = அச்சம் பொருந்திய;
வியன் நகர் =  பெரிய ஊர்களில் அமைந்துள்ள;

ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்             245
வெறியாடும் (சாமியாடும்) இடங்கள் எதிரொலிக்குமாறு பாடி;

Singing to echo in the dancing places, with many,

ஆடுகளம் = மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடும் இடம்;
சிலம்ப = ஒலிக்க;
பாடி = பாடி;
பலவுடன் = பலவகை;

கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி  246
பலவகை ஊது கொம்புகளை வாயில் வைத்து ஊதி,  வளைந்த மணிகளை ஆட்டி ஒலிக்கச் செய்து,

Blowing various horns from the mouth, ringing curved bells,

 பலவுடன் கோடு வாய்வைத்து = பல ஊது கொம்புகளை வாயில்  வைத்து ஊதி;
கொடுமணி இயக்கி = வளைந்த மணியினை ஒலிக்கசெய்து;

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி  247
ழியாத ஆற்றலுடைய (முருகனது) யானையை வாழ்த்தி, 

Blessing  Murugan's elephant which has immortal strength;

 ஓடாப்பூட்கை = என்றென்றும் கெடாத வலிமை;
பிணிமுகம் = யானை;
வாழ்த்தி = வாழ்த்தி;

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட           248
வேண்டுவார் வேண்டுவனவற்றை வேண்டியபடி அடைந்தவராய் வழிபாடு செய்ய,

Those who attained their desires, worship,

வேண்டுநர் = வேண்டுவார்;
வேண்டியாங்கு = வேண்டியபடி;
எய்தினர் = அடைந்தவராய்;
வழிபட = வழிபாடு செய்ய;

ஆண்டுஆண்டு உறைதலும் அறிந்த வாறே           249
அந்த அந்த இடங்களிலும் முருகன் அமர்ந்திருப்பதும் அறிந்த செய்தியேயாம்;

It is well known that Murugan resides in those places;

 ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த வாறே = அந்தந்த
 இடங்களில் முருகன் தங்கவும் செய்வான் என்பது அறிந்த செய்தியேயாம்;

    [முருகனைப் போற்றும் முறை
[ Method  of praising Murugan]

ஆண்டு ஆண்டு ஆயினும்ஆக காண்தக  250
(இதுகாறும் கூறிய) அவ்வவ் விடங்களிலே யாயினும் பிற இடங்களிலே யாயினும் முருகன் அமர்ந்திருக்க;

While Murugan resides in these places or other places;

ஆண்டாண்டு ஆயினும் ஆக = [முருகன் மகிழ்ந்து உறையும்] அனைத்து இடங்களிலும்;
காண்தக = கண்டு தரிசிக்கும்;

முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்தி        251
நீ முற்பட்டு [முருகப்பெருமானைக்] கண்டால், அவனை முகம் மலர்ந்து வாய்ச் சொற்களால் போற்றி;

When you see [Lord Murugan] in front of you, you must display a bright smile and praise him with words;

காண் தக முந்துநீ கண்டுழி = முருகப்பெருமானைக் காணப்பெற்றால்;
முகன் அமர்ந்து ஏத்தி = முகம் மலர்ந்து வாய்ச் சொற்களால் போற்றி;

கைதொழூஉப் பரவி காலுற வணங்கி        252
 கையால் தொழுது கும்பிட்டுக் காலிலே தலை பொருந்த விழுந்து வணங்கி;

You worship him with folded hands and prostrate before him so that you head touches his feet.

 கைதொழூஉப் பரவி கால்உற வணங்கி = இரு கைகளையும் தலை மீது குவித்து புகழ்ந்து வணங்கி, திருமுருகப்பெருமானின் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கி;

                                  [முருகனைப் போற்றுதல்]
                                          [Praising Murugan]

நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை        253
(பின் வருமாறு முருகனை விளித்து, அஃதாவது: ) “நீண்டபெரிய இமயமலையின் உச்சியிலே தருப்பை வளர்ந்த பசுமையான பொய்கையிலே;

And address him as follows: On top of the Himalayas mountain, in a natural reservoir surrounded by lush growth of 'dharba' grass;

நெடும்பெரும் = நீண்டபெரிய;
சிமையம் = இமயமலையின் உச்சி;
நீலப் பைஞ்சுனை = நீல நிறமுடைய 'சரவணம்' எனப்படும் தருப்பையை உடைய பசுமையான பொய்கையில்;

வருள் ஒருவன் அங்கை ஏற்ப        254
[விண், காற்று நெருப்பு, நீர், மண் என்னும்] ஐந்து தெய்வங்களுள் ஒருவனான அக்கினி பகவான் தன் அழகிய கையிலே ஏற்றுவர;

The fire god, one of the five deities [celestial, air, fire, water, and earth], to carry you in his beautiful hands;

 ஐவருள் ஒருவன் = 'வானம், நிலம், நீர், காற்று, நெருப்பு' ஆகிய ஐம் பூதங்களில் ஒன்றாகிய அக்கினி பகவான்;
அங்கை = உள்ளங்கை;
ஏற்ப = ஏற்றுவர;

அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ             255
கார்த்திகைப் பெண்டிர் அறுவர் பெற்றெடுத்த ஆறு கூறாய் அமர்ந்துள்ள செல்வனே!

Received by  six 'Karthikeya' ladies as precious child, 

அறுவர் = [செவிலித் தாய்களாகப் பணியாற்றிய] கார்த்திகைப் பெண்டிர் அறுவர்;
பயந்த = பெற்றெடுத்த;
ஆறுஅமர் = ஆறு கூறாய் அமர்ந்துள்ள;
செல்வ = செல்வனே!;

குறிப்பு 
கார்த்திகை நட்சத்திரம் (
Pleiades) என்றால் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டம் ஆகும்.

Note: The Karthika star (Pleiades also known as Seven Sisiers) is a constellation of six stars.

Pleiades


ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை           256
கல்லால மரத்தின் கீழமர்ந்த சிவனின் மகனே! பெரிய மலையாகிய இமயமலையரசன்;

Son of Shiva who sits under a banyan tree, The king of tall  Himalaya  mountain;

ஆல்கெழு கடவுள் = கல்லால மரத்தின் கீழ் இருந்த சிவபெருமான்;
புதல்வ = மகனே!
மால்வரை = பெருமையுடைய இமயமலையின் அரசன்;

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே           257
மலைமகளாகிய உமையின் மகனே! பகைவர்க்கு எமனே!

Son of Umathevi, the daughter of (the king of Himalayas), death to the enemies,

மலைமகள் = இமயமலை அரசனின் மகளான பார்வதி தேவி;
மகனே= மகனே;
மாற்றோர் கூற்றே =  தீய பகைவருக்கு எமன் போன்றவரே;

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ           258
வெற்றிவேல் ஏந்திய போர்த்தெய்வமாகிய கொற்றவையின் குமரனே! அணிகலன் பூண்ட சிறப்புடைய பழம்பெருந் தெய்வமாகிய துர்க்கையின் குழந்தையே!

Son of the victorious warrior 'Kotravai'! The child of Durga, the legendary goddess,

வெற்றி வெல்போர்க் கொற்றவை = வெற்றியை உடைய வெல்லும் போர்க் கடவுளான கொற்றவை [துர்க்கை];
சிறுவ = குழந்தையே!

இழையணி சிறப்பின் பழையோள் குழவி           259
அணிகலன் பூண்ட சிறப்புடைய பழம்பெருந் தெய்வமாகிய துர்க்கையின் குழந்தையே!;

The child of the special legendary goddess Durga who is bedecked with rich ornaments!

இழையணி = அணிகலன் பூண்ட;
சிறப்பின் = மேம்பாடு;
பழையோள் = பழம்பெருந் தெய்வமாகிய துர்க்கை; [சிவபெருமானின் சக்தி];
குழவி = குழந்தை;

வானோர் வணங்கு வில் தானைத்தலைவ   260
தேவர்கள் வணங்கும் (தேவர்களுடைய) வில்லேந்திய படைகளின் தலைவனே!

O chief of the spear-armed forces of the gods!

வானோர் = தேவர்கள்;
வணங்கு = வணங்குவதற்குரியவரும்;
வில்தானைத் = விற்படைகளுக்கு;
தலைவ = தலைவர்;

மாலை மார்ப நூல்அறி புலவ  261
மாலையணிந்த மார்பனே! நூல்களைத் தெளிந்த புலவனே!

With garland on the chest! Thou who hast mastered the scriptures!

மாலை மார்ப = மலர் மாலை அணியபெற்ற மார்பினையுடையவரே!;
நூல்அறி புலவ = மெய்யான நூல்களின் உண்மையான பொருளை  அறியும் புலமையுடைய
வரே!;

செருவில் ஒருவ பொருவிறல் மள்ள          262
போர்த் தொழிலில் ஒப்பற்றவனே! போரில் வெற்றிபெறும் மாவீரனே!

Unparalleled in the war! Hero who wins the battles!

செருவில் ஒருவ = போர்த் தொழிலில் ஒப்பற்றவனே;
பொரு = போர்;
விறல் = வீரம்;
மள்ள = மாவீரனே;

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை          263
அந்தணர் செல்வமே! அறிஞர்களின் புகழ்ச்சொல் மலையே!

Wealth of Brahmins! The mountain of praise of scholars!

 அந்தணர் வெறுக்கை = அந்தணர்களுக்கு  செல்வமாக விளங்குபவரே!;
அறிந்தோர் சொல்மலை = அறிந்தோர் இயற்றியுள்ள நூல்களில் அடங்கிய 
புகழ்ச்சொற்களின் மலையே!; 

மங்கையர் கணவ மைந்தர் ஏறே­          264
தெய்வானை, வள்ளி ஆகிய மங்கையர்களின் கணவனே! மறமைந்தர் களின் சிங்கமே!

Husband of  Deivaanai and Valli! The lion among the strong!

மங்கையர் கணவ = தெய்வானை அம்மையார், வள்ளியம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே!
மைந்தர் ஏறே = வலிமை உடையோர், அல்லது இளைஞர் 
அனைவருக்கும் தலைவரே!

வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ             265
வேலேந்திய கையையுடைய பெருமை உள்ள செல்வனே!

With the spear in the valiant hand, you are the God praised by the devotees.

வேல்கெழு = வேலேந்திய;
தடக்கை = கையையுடைய;
சால்பெரும் = பெருமை உள்ள;
செல்வ = செல்வன்;

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து           266
கிரவுஞ்ச மலையைப் பிளந்த, குறையாத வெற்றியினையுடைய;

Splitting the 'Krauncha' Mountain, you are with unlimited victories;

குன்றம் = அசுரர் தலைவன் சூரபன்ம ஒளிந்திருந்த கிரௌஞ்ச மலையை;  
கொன்ற = பிளந்த;
குன்றாக் = குறையாத;
கொற்றத்து = குறையில்லாத வெற்றியை உடையவருமான முருகன்;

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ          267
விண்ணோடு மோதும் நீண்ட மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு உரிமை பூண்ட தலைவனே!

O leader, you own the land of mountain range, which is full of long hills colliding with the sky!

விண்பொரு = வானத்தைத் தொடும் வகையில்;
நெடுவரை = மிக உயரமான;
குறிஞ்சிக்கிழவ = குறிஞ்சி நிலத்திற்கு உரிமை பூண்ட   தலைவனே!

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே          268
பலரும் புகழும் நன்மொழி வழங்கும் புலவர்களின் தலைனே!

You are the leader of the poets who write about good ethics and are praised by many!

பல்புகழ் = பலரும் புகழும்;
நன்மொழிப் = நல்ல மொழிகளிலும்;
புலவர் = புலவர்கள்;
ஏறே = தலைவனே!;

குறிப்பு

ஏறு என்பது ஆண்பால் விலங்குகள் சிலவற்றுக்கான சிறப்புப் பெயர். காளை மாட்டுக்கும், சுறாமீனில் ஆணுக்கும், ஆண் அரிமாவுக்கும் (சிங்கத்திற்கும்) வழக்கமாகக் கூறும் பெயர்.

Note

[ஏறு ] is a masculine  name for some of the young animals. such as bull, male in shark, and male lion. Here it means a leader.

அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக          269
பெறுதற்கு அரிய நன்மரபினையுடைய, பெரிய பெயர் பெற்ற முருகனே!

Murugan, who has a rare heritage  and a great reputation!

அரும்பெறல் = பெறுதற்கு அரிய ;
மரபின் = அரிய நன்மரபினையுடைய;
பெரும்பெயர் = பெரிய பெயர்;
முருக =  முருகன்;

 நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள             270
ஒன்றை விரும்பி வந்தோர்க்கு அதனை நிறைவிக்கும் பெரும் புகழாளனே!

You have a great reputation for giving whatever your devotees ask from you.

 நசையுநர்க்கு = ஒன்றை விரும்பி வந்தோர்க்கு;
ஆர்த்தும் =  அதனை நிறைவிக்கும்;
இசைபேர் ஆள = பெரும் புகழையுடைய வள்ளல்;

 அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்          271
துன்புறுவோர்களுக்கு அருள் செய்கிற, பொன்னாலாகிய அணிகலன்களை அணிந்துள்ள சிவந்த திருமேனியனே!

O red bodied Lord who wears gold ornaments and bestow grace on the afflicted!

அலந்தோர்க்கு = துன்புறுவோர்களுக்கு;
அளிக்கும் = அருள் செய்கிற;
பொலம்பூண் = பொன் அணிகலன்களை அணிந்துள்ள
சேஎய் = சிவந்த திருமேனியனே!  

மண்டுஅமர் கடந்தநின் வென்றுஆடு அகலத்து          272
போர்க் களத்தில் போர்களைவென்று வெற்றிப் பாடல் களுக்குரிய  உனது பரந்த மார்பால்,

With your chest that deserves songs of victory because of the battles that you have won, 

மண்டுஅமர் = போர்க் களத்தில்;
கடந்த = போர்களைக் கடந்த;
நின் = உனது;
வென்றுஆடு = வெற்றிப் பாடல்;
அகலத்து = பரந்த மார்பால்;
 

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்        273
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்          274
பரிசில் வேண்டிவரும் அன்பர்களைத் தழுவித் தாங்கிக் காக்கின்ற, அன்பு, பக்திக்கு உரிய நெடிய செவ்வேளே! பெரியோர்கள் போற்றும், பெறுதற்கரிய பெயர் பெற்ற கடவுள் தலைவனே!

You embrace and sustain your devotees who come to ask for their needs. You are revered by great people and you have a reputable name!

பரிசிலர் = பரிசில்பெற வருகின்றவர்கள்;
தாங்கும் = தாங்கிக்கொண்டு;
உருகெழு பய பக்திக்கு உரிய;
நெடுவேஎள் = பெருமையுடைய தலைவராக விளங்கும்;
பெரியோர் = பெரியோர்கள்;
ஏத்தும் = போற்றும்;
பெரும்பெயர் = பெரும் புகழினையுடைய;
இயவுள் =கடவுள்;

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி             275
அசுரர் தலைவன் சூரபன்மனின் குலத்தை வேரோடு அறுத்த ஆற்றலையும்  வலிமையையும் உடையவனே!

You had the power and strength to uproot the clan of the giant leader Surapanman!

சூர் = அசுரர் தலைவன் சூரபன்மனும்;
மருங்கு = அவன் சுற்றத்தாரும்;
அறுத்த = அழியும்படி செய்த;
மொய்ம்பின் = வலிமை, தோள்;
மதவலி = வலிமையின் தலைசிறந்த 'மதவலி' என்னும் பெயருக்குரிய முருகன்;

 போர்மிகு பொருந குரிசில் எனப்பல            276
மிகவும் சிறப்பாகப் போரிடும் வீரனே ! மேலான போற்றத்தக்க தலைவனே! என்றெல்லாம் பலவாறாக;

You are a Very good fighting hero! Most Admirable Leader! Praiseworthy and similarly in many ways;

போர்மிகு பொருந = மிகவும் சிறப்பாகப் போரிடும் வீரர்       எனப்போற்றப்படும் முருகன்;
குரிசில் = போற்றத்தக்க;
எனப்பல = என்றெல்லாம் பலவாறாக;

யான்அறி அளவையின் ஏத்தி ஆனாது             277
யான் அறிந்த அளவு நின்னைப் போற்றியும் அது மட்டுமல்லாமல்;

I praise you as much as I know. Not only that;

யான் அறி = யான் அறிந்துள்ள;
அளவை = அளவு;
ஏத்தி = கூறி  போற்றி;
ஆனாது = அது மட்டுமல்லாமல்;

நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின்       278
நின்அடி உள்ளி வந்தனென் நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமையோய் எனக்             280
உன் பெருமை முழுதும் அளவிட்டு அறிந்து போற்றுதல் உலகில் உள்ள உயிர்கட்கு அரிதாதலின் இயன்ற அளவு போற்றி, உன் திருவடியைப் பெறக் கருதி வந்துள்ளேன்; உன்னோடு ஒப்பார் இல்லாத புலமையுடையவனே! அடியேற்கு அருள் செய்க!

It is difficult for human beings to fathom and praise your greatness. I have come here to praise as much as I can and reach your divine feet. There is no one with knowledge comparable to yours. Have mercy on me.

 நின்அளந்து = நின் பெருமை முழுதும் அளவிட்டு;
அறிதல் = அறிந்து;
மன்உயிர்க்கு = உலகில் உள்ள உயிர்கட்கு;
அருமையின் = அரிதாதலின்;
நின்அடி = நின் திருவடியைப்;
உள்ளி = கருதி;
வந்தனென் = வந்துள்ளேன்;
நின்னொடு = உன்னோடு;
புரையுநர் = ஒப்பார்;
இல்லா = இல்லாத;
புலமையோய் = புலமையுடையவனே!;
என =  என;

[கூளியர் அறிமுகம்
[Introduction of Coolier]  

குறித்தது மொழியா அளவையின் குறித்துஉடன்         281
குறித்த எண்ணத்தைச் சொல்வதற்குள்ளேயே,

Even before you make known your wish to the Lord, as soon as you wish something,

குறித்தது =  குறித்த எண்ணத்தை;
மொழியா = சொல்லாத;
அளவையின் = அளவிலேயே;
குறித்து உடன் = குறிப்பிட்ட போதே;

 வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்         282
பல்வேறு வடிவினையுடைய குறுகிய பல கூளியர் என்னும் தெய்வப் பணியாளர்,

The divine servants of the Lord short and of various shapes,

 வேறு பல் உரு = பல்வேறு வடிவினை உடைய;
குறும்பல் கூளியர் = குட்டையான பல ஏவலாளர்;

சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி        283
(பின் வருமாறு உன்னை முருகனுக்கு அறிமுகப்படுத்துவர்; அதாவது), விழா நடைபெறும் களத்திலே பொலிவுடன் தோன்றி,

(They will introduce you to Murugan as follows; i.e.), appearing in glory on the field where the festival takes place,

சாறு அயர் களம் = திருவிழா நடைபெறும் இடம்;
வீறுபெறத்தோன்றி = பொலிவுடன் தோன்றி;

அளியன் தானே முதுவாய் இரவலன்        284
இந்த முதிய பண்பட்ட பிச்சைக்காரன் இரங்கத்தக்கவன் தான்;

This old civilized beggar is worthy of kindness,;

அளியன் = இரங்கத்தக்கவன்;
தானே = தானே;
முதுவாய் இரவலன் = அறிவுமுதிர்ந்த சொற்களையுடைய பிச்சைக்காரன்;

வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்து என          285
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி        286
பெருமானே, உனது வளவிய புகழுக்குரிய அருளை விரும்பி உன்பால் வந்துள்ளான் என்று அறிமுகம் செய்து, இனியவையும் நல்லவையுமாக மிகப் பல கூறி போற்றி நிற்க,

"Great Lord, He has come here seeking your praiseworthy ocean of mercy".  They will introduce the worshipper to the Lord, using  sweet and good words.

வந்தோன் = வந்தவன்;
பெரும = பெருமானே;
வண்புகழ் = புகழுக்குரிய வள்ளல் தன்மை;
என = என்று;
இனியவும் = இனியவையும்;
நல்லவும் = நல்லவையுமாக;
நனிபல = மிகப் பல;
ஏத்தி = போற்றி ;

 

      [முருகன் பரிசளிக்கும் முறை]
[Murugan's gifting method]

தெய்வம்சான்ற திறல்விளங்கு உருவின்         287
தெய்வத் தன்மை நிறைந்த ஆற்றல் மிக்க உருவத்துடனும்;

With an energetic powerful image full of divinity;

தெய்வம் சான்ற = தெய்வத்தன்மை பொருந்திய;
திறல் விளங்கு உரு = வலிமையுடன் விளங்கும் வடிவம்;

வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி         288
வானைத் தொடும் உயரிய தோற்றத்துடனும் தான் (முருகன்) உன் முன் தோன்றி,

(Murugan) would appear in front of you, very tall such that his head touches the sky,

வான்தோய் நிவப்பு = வானைத் தொடும் உயரம்;
தான்வந்து எய்தி = உன் முன் தோன்றி;

அணங்குசால் உயர்நிலை தழீஇ பண்டைத்தன்        289
பயபக்திக்கு உரிய தனது உயர்ந்த நிலையைத் தன்னுள் மேற்கொண்டு,

Upholding within himself his lofty position which deserves respect,

அணங்கு = வருத்தம், அல்லது அச்சம் விளைவிக்கும் தோற்றம்;
உயர்நிலை தழீஇ = தெய்வத்தன்மையை உடைய;
பண்டைத்தன் = தொன்மையான

மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி             290
(தனது தொன்மையான) மணம் கமழும் தெய்வத் தன்மையோடு கூடிய என்றென்றும் இளைய ழகை;

(His ancient) fragrant and ever young beauty with divinity;

மணங்கமழ் = மணம் கமழும்;
தெய்வத்து = தெய்வத் தன்மை;
இளநலம் = என்றென்றும் இளமையுடைய தன்மை;
காட்டி = காணச் செய்து;

அஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவு என             291
அன்புடை நல்மொழி அளைஇ விளிவுஇன்று            292
அன்பனே அஞ்சாதே, நம்பி நில், நினது வருகையை யான் அறிவேன்’ என்று அன்பு கனிந்த நல்லுரை கூறி,

Murugan will speak some good words: ‘Don’t be afraid dear, trust me, I know your arrival’

அஞ்சல் = அஞ்சாதே;
ஓம்புமதி = காப்பாற்றுவேன்;  மதி   அசைச் சொல்;
அறிவல் = நான் அறிவேன்;
நின் வரவு = னது வருகையை;
என = என்று;
அன்புடை = அன்பு கனிந்த;
நல்மொழி = நல்லுரை;
அளைஇ = கூறி;
விளிவுஇன்று = கேடு இல்லாமல்;

இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து            293
(அழிவு இல்லாதபடி,) இருள் நிறமான கருங்கடல் சூழ்ந்த இவ்வுலகிலே;

In a world surrounded by a dark black ocean (without destruction);

விளிவுஇன்று = கேடு இல்லாமல்;
இருள்நிற = இருள் நிறமான;
முந்நீர் = கருங்கடல்;
வளைஇய = சூழ்ந்த;
உலகத்து = இவ்வுலகிலே;

ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய             294
(முருகன் அருள் பெற்றவர்களுள்) நீயே ஒப்பற்ற ஒருவன் என்னும் பேறுடன் திகழும்படி;

(Among those who have been blessed by Lord Murugan) you will live as an  incomparable one;

 ஒரு நீயாகித் தோன்ற = உலகத்தில் தனிப்பெரும்  சிறப்புடையவனாக நீ விளங்குமாறு;
விழுமிய = தோற்றமுடைய;

[பழமுதிர் சோலை மலையான் பரிசில்
[Gift of the Lord of Palamuthirsolai]   

பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன்          295
சிறந்த பெறுதற்கரிய (திருவடிப்பேறு ஆகிய) பரிசிலை வழங்கியருள்வான். 
பல நல்ல புத்திமதிகள் சொல்வான்.

He will give you the best reward  and some good advice.

பெறல் அரும் பரிசில் = பெறுவதற்கு அரிதான சிறப்புமிகுந்த பரிசில்.;
நல்குமதி பலவுடன் = பல நல்ல புத்திமதிகள் சொல்வான்;

[மழையின் செயல்]
[The work of the rain]

 வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து             296
பல விதமாக வேறுபட்ட பல வெண்ணிற துணிக்கொடிகளைப் போல அசைந்து அசைந்து (அருவிகள்) ஓடிவந்து, அகில் மரத்தைப் பெயர்த்துச் சுமந்து கொண்டு வரவும்;

The torrential waterfall, uprooting agil ( Aquilaria agallocha) tree, brings it down from the hill-top. This appears like waving various types of white flags.   

வேறுபல் = பல விதமாக வேறுபட்ட;
துகிற்கொடி = வெண்ணிறத் துணியாலான]கொடி;
அகில் சுமந்து = சாய்த்துத் தள்ளிய அகில் மரக் கட்டைகளைச் சுமந்துகொண்டு வரவும்;
அகில் - அகர் (Aquilaria agallocha). சந்தனமரத்தைப் போன்று இது வாசனை மிக்க மரம். இம் மரக்கட்டயிலிருந்து  ஊதுபத்தி தூபம் முதலியன செய்யப்படுகின்றன.


அகில்

ஆர முழுமுதல் உருட்டி வேரல்       297
சந்தன மரத்தை முழு அடி மரத்தோடு உருட்டித் தள்ளி,

Uprooting the whole sandalwood tree with trunk,

ஆரம் = சந்தன மரம்;
முழுமுதல் = பருத்த அடி மரம்;
உருட்டி = உருட்டித் தள்ளி;
வேரல் = சிறு மூங்கில்;

பூவுடை அலங்கு சினைபுலம்ப வேர்கீண்டு      298
மூங்கிலின் பூவோடு கூடிய அசையும் கிளைகள் தனித்துப் போக வேரைப் பிளந்து,

Movable branches of bamboo tree with flowers to split off to be separate,

வேரல் = சிறு மூங்கில்;
பூவுடை = பூவோடு கூடிய;
அலங்குசினை = அசைகின்ற கிளை;
புலம்புதல் = தனிப்படல்;
வேர் கீண்டு = வேரைப் பிடுங்கி;

விண்பொரு நெடுவரைப் பரிதியின் தொடுத்த      299
வானத்தை மோதும் நீண்ட மலைப்பகுதியிலே சூரியனின் வட்டம்போல் தேனீக்கள் தொடுத்து அமைத்த [தேன் கூடு];

Bees swarming like a circle of the sun on a tall hill that reaches the sky;

 விண்பொரு நெடுவரை = வானத்தைத் தொடுவது போன்ற உயரமுடைய மலை;
பரிதியின் தொடுத்த = மலை உச்சியில் அமைந்த [தேன் கூடு];

தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல             300
குளிர்ந்த மணம் கமழ்கிற விரிந்த தேன்கூடு சிதைந்து அழியவும்,

Disintegrate the  honeycomb that is cold and fragrant,

தண் கமழ் இறால் = குளிர்ச்சியும் மணமும் உடைய தேன் கூடு;
சிதைய = சிதைந்து அழியவும்;
நன்பல = நல்ல பல;

ஆசினி முதுசுளை கலாவ மீமிசை      301
நல்ல பல ஆசினிப் பலாவின் முதிர்ந்த சுளைகள் நீரோடு கலக்கவும்;

Drop the mature kernels of the many 'Asini' jack fruits into the water;

நன் பல் ஆசினி = நல்ல பலாமர வகையில் ஒன்றான ஆசினிப்பலா;
கலாவ = கலக்க;
மீமிசை = மிக உயர்ந்த;

நாக நறுமலர் உதிர யூகமொடு      302
மிகுந்த மலை உச்சியிலுள்ள சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர்ந்து கொட்டவும்,

The fragrant flowers of the 'Surapunnai' at the top of the hill fall off,

நாகம் = சுரபுன்னை மரம்;  
நறுமலர் = நறிய மலர்கள்;
உதிர = உதிர்ந்து கொட்டவும்;
யூகம் = கருங்குரங்கு;

சுரபுன்னைபூ

மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்      303
யூகம் என்னும் கருங்குரங்குடன் கரிய முகமுடைய முசுக்கலை என்னும் குரங்கும் நடுங்கவும்;

The black-faced 'yugam' monkey along with black monkey called 'musukkalai' tremble.

மாமுக = கரிய முகமுடைய;
முசுக்கலை = ஒருவகை பெண் குரங்கு;
பனிப்ப = குளிரால் நடுங்க;
பூநுதல் இரும்பிடி = நெற்றியில் புள்ளிகளை உடைய கரிய 
பெண் யானை;

இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று      304
புள்ளி பொருந்திய பெரிய பெண்யானை குளிரால் உதறவும் நீரை வீசியெறிந்து,

Spotted female elephants tremble because of cold and throw water at;

இரும்பிடி = கரிய பெண் யானை;
குளிர்ப்ப = குளிரால் உதறவும்;
வீசிப = (நீரை) வீசியெறிந்து;
பெருங்களிற்று = பெரிய ஆண்யானை;

முத்துடை வான்கோடு தழீஇ தத்துற்று             305

பெரிய ஆண் யானையின் முத்துக்களை உடைய நீண்ட கொம்புகளை இழுத்துக் கொண்டு வந்து;

Drag down the long tusks with pearls of large male elephant;

முத்துடை = முத்துக்களை உடைய;
வான் கோடு = யானையின் வெண்மையான கொம்பு;
தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு;
தத்துற்று = குதித்து;

நன்பொன் மணிநிறம் கிளர பொன்கொழியா      306
நல்ல பொன்னும் மணியும் தம் ஒளிநிறம் விளங்கச் செய்து, பொன் துகளைக்  கொண்டு வந்து,

The waterfall brings down gold and gem stones that shine brightly,

நன்பொன் = நல்ல பொன்னும்;
மணிநிறம் = மணியின் ஒளிநிறம்;
கிளர = விளங்கச் செய்து;
பொன் கொழியா = பொன்னினைப் பொடி வடிவில் கொண்டுவந்து கரையோரத்தில் ஒதுக்கி;

வாழை முழுமுதல் துமியத் தாழை      307
வாழையின் முழு மரமும் ஒடிந்து சாயவும்;

The whole banana tree falls down;

வாழை முழுமுதல் = வாழை மரத்தின் அடிப்பகுதி;
துமிய = துண்டாகுமாறு செய்து;
தாழை = தென்னம் பாளை;

இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி      308
தென்னையின் பெரிய இளநீர்க் குலை உதிரவும் நீரை வீசியெறிந்து தாக்கி,

Large bunch of coconut drop down into the water,

 இளநீர் விழுகுலை = உதிர்கின்ற இளநீர்க் குலைகள்;
உதிர = (குலை) உதிரவும்;
தாக்கி = (நீரை வீசியெறிந்து) தாக்கி;

கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற      309
மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயவும்,

Black clusters of peppercorns fall down,

கறிக்கொடி = மிளகுக் கொடி;
கருந்துணர் சாய = கரிய கொத்துகள் சாய்ந்து விழ;
பொறி = மயிலின் இறகு;
புற = பின்புறத்தே;

மிளகுக் கொடி


மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ             310
பின்புறத்தே பீலி பொருந்திய இளநடையுடைய மயில்கள் பல சேர்ந்து அஞ்சவும்,

A number of young peacocks gather together and are afraid,

 மட நடை = இளமை பொருந்திய நடையை உடைய;
மஞ்ஞை = மயில்;
பலவுடன் = பல சேர்ந்து;
வெரீஇ = அச்சமுற்று;
 

கோழி வயப்பெடை இரிய கேழலொடு            311
வலிய பெட்டைக் கோழிகள் பதறி ஓடவும், ஆண் பன்றியுடன்,

Strong hens run away trembling; with the male pig,

கோழி = கோழி;
வய = வலிய;
பெடை= பெட்டை;
இரிய = பதறி ஓட;
கேழல் = ஆண் பன்றி;
 

இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன            312
கரிய பனை மரத்தின் மெல்லிய சிறாம்பு போன்ற;

Like the dark fibre of the palmyrah palm;

இரும்பனை = கரிய பனை மரம்;
சாய் = சிறாய், 
சிறாம்பு;
வெளிறு = வயிரம் இன்மை;
புன்சாய் = மெல்லிய சிறாம்பு;
அன்ன = போன்ற;

குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்            313
கருமயிரோடு கூடிய உடம்பினையும், வளைந்த காலடியினையும்;

 Body with black hair and bent legs;

குரூஉமயிர் = கருமயிர்;
யாக்கை = உடம்பு;
குடா = வளைந்த;
அடி = காலடி;
உளியம் = கரடி;

பெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு        314
(வளைந்த காலடியினையும் உடைய) கரடி பெரிய கல் குகையிலே சென்று அடைந்து கிடக்கவும்,

The bear (with curved feet) goes into the big stone cave and lies down,

பெருங்கல் = பெரிய கல்;
விடர் = வெடிப்பு;
அளை = குகை;
செறிய = சென்று அடைய;
கருங்கோட்டு = கரிய கொம்புகளையுடைய;

ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று             315
(கரிய கொம்புகளையுடைய) ஆமா இனத்தின் நல்ல காளைகள் கதறிக் கத்தவும்;

The good Ama breed bulls with black horns  howl;

ஆமா = ஆமா இனத்தின்;
நல் ஏறு = நல்ல எருது;
சிலப்ப = கதற, ஒலிக்க;
சேண்நின்று = உயர்ந்த மலையுச்சியிலிருத்து;

இழுமென இழிதரும் அருவி                                                       316
பல்வேறு செயல்கள் புரிந்து உயர்ந்த மலையுச்சியிலிருத்து ‘இழும்’—‘இழும்’ என்னும் ஒலியுடன் கீழ்நோக்கி இறங்கி ஓடிவரும் அருவியினை உடைய

With a waterfall running downhill with the sound of ‘ilum’ - ‘pilum’ from a high peak

இழும் என = அருவி மலை உச்சியிலிருந்து விழும்போது கேட்கும் ஒலி.
இழிதரும் = வந்துவிழுகின்ற;
அருவி = அருவி;

பழமுதிர் சோலை மலைகிழ வோனே.             317
பழம் முதிர்ந்து கனிந்த சோலை சூழ்ந்த, ‘பழமுதிர் சோலைமலை’ என்னும் மலைக்கும் உரிமை உடையவன் அம்முருகன் .

Surrounded by a fruit-bearing orchard called 'Palamudir Cholaimalai', and Murugan is the owner of it.

பழமுதிர் சோலை மலை = பழமுதிர் சோலை மலை (பழம் முதிர்ந்து கனிந்த சோலை சூழ்ந்த);
கிழவோனே = உரிமை உடையவனே.

முருகப்பெருமானின் சிறப்பினை உணர்த்தும் பாடல்களாக 10 வெண்பாக்கள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடியவர் யார் என்று தெரியவில்லை. இவை பிற்காலத்தில் எழுதப்பட்டவை.

நேரிசைவெண்பா

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்!  என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை.(1)

வேல் வீசி கிரவுஞ்ச மலையைப் பிளந்தவனே!, திருச்சீரலைவாயில் சூரபன்மனை வேலால் வீழ்த்தியவனே!, பரட்டைத்தலைப் பூதப்படைத்  தலைவனே!, என்றும் இளமையானவனே!, என்றும் அழகியவா!, காளையை  ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் மகனே!, என்றும் என் அருகில் இருப்பவனே!, என் உள்ளத்தில் நிலைகொள்வாயாக!

The one who threw the spear and split the 'Kravuncha' mountain! The one who killed Soorapanman with the spear. Chief of 'Pootha' soldiers with dry hair!  Forever young!, Forever beautiful! Son of Lord Shiva riding a bull! The one who is always near me. Stay in my heart!

குன்றம் = மலையை (கிரவுஞ்ச மலை);
எறிந்தாய் = வேல் வீசி  பிளந்தவனே!
குரைகடலிற் = அலைகடலில் (திருச்சீரலைவாய்);
சூர்தடிந்தாய் = சூரபன்மன் என்பவனை வேலால் வீழ்த்தியவனே!
புன் தலைய = பரட்டைத்தலை;
பூதப் பொரு படையாய் = பூதப்படை கொண்டவனே!
என்றும் = என்றும்;
இளையாய் = இளமையானவனே!
அழகியாய் = அழகனே;
ஏறு ஊர்ந்தான் =  காளையை  ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான்;
ஏறே = காளையே!
உ ளையாய் = என்றும் என் அருகில் இருப்பவனே!
என் உள்ளத் துறை = என்  உள்ளத்தில் நிலைகொள்வாயாக;

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும்,  இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்! 2

கிரவுஞ்ச மலையை பிளந்ததுவும், பகை குன்றப் போரிட்டதுவும், தேவர்களின் துன்பத்தைத் தீர்த்ததுவும், இன்று என்னைக் கைவிடாமல் இருந்ததுவும், கல்லுக் குகையில் அடைக்கப்பட்டிருந்த என்னைக் காப்பாற்றியதுவும், என் உடலைப் பற்றிநிற்கும் வேலனின் கைவேல்  அல்லவா?

Was it not the handiwork of Murugan that split the mountain of Kravuncha, fought the war of enmity, solved the suffering of the gods(Devas), and that did not abandon me today, and saved me from being trapped in a stone cave?

குன்றம் எறிந்ததுவும் = கிரவுஞ்ச மலையை பிளந்ததுவும்;
குன்ற = பகை குன்ற;
போர் செய்ததுவும் = போர் செய்ததுவும்;
அன்று = அன்று;
அங்கு = அங்கு;
அமரர் = தேவர்;
இடர் =  துன்பம்;
தீர்த்ததுவும் = தீர்த்ததுவும்;
இன்று = இன்று;
என்னை = என்னை;
கைவிடா நின்றதுவும் = கைவிடாமல்  இருந்ததுவும்;
கற்பொதும்பில் காத்ததுவும் = கல்லுக் குகையில் அடைக்கப்பட்டிருந்த என்னைக் காப்பாற்றியதுவும்;
மெய் விடா = உடலை விட்டு அகலாத;
வீரன் = வீரன்;
கை =கையிலிருக்கும்;
வேல் = வேல்;

குறிப்பு

பூதம் ஒன்று நக்கீரரைப் பற்றிச் சென்று உண்ணும் கருத்தில் கல்லுக் குகையில் அடைத்தது. சிறையிலிருந்து விடுபடுவதற்காக  முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படையைப்  பாடிப் போற்றினார். முருகன் அவருக்குக் காட்சியளித்து அவரை சிறையிலிருந்து விடுவித்தார். 

Note

One giant imprisoned him in a stone cave with the idea of eating him. Nakkirar sang 'Thirumurugatrupadai' in praise of Lord Murugan for his release from prison. Lord Murugan appeared to him and released him from prison. 

வீர வேல் தாரை வேல் விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல் செவ்வேள் திருக் கை வேல்  வாரி
குளித்த வேல் கொற்ற வேல் சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.  3.

முருகன் கையிலுள்ள வேல், வீரம் மிக்க வேல், மழைத்தாரை போல் பொழியும் வேல், தேவர்களைச் சிறையிலிருந்து  விடுவித்த  தீரம் மிக்க வேல், கடலில் குளித்துத் தன் கறையைப் போக்கிக்கொண்ட வேல், சூரன் மார்பையும், கிரவுஞ்சமலைக் குன்றையும் துளைத்த வேல், அது என்றும் எமக்கு துணை.

The spear in the hand of Murugan, the valiant spear, the spear that rains goodness, the spear which he used to free the gods from prison, the spear that bathed in the sea to get rid of the blood stain, the spear that pierced Suran's chest and the hill of Krauncha, that spear will always protect us.

வீர வேல் = வீரம் மிக்க வேல்;
தாரை வேல் = மழைத்தாரை போல் பொழியும் வேல்;
விண்ணோர் சிறை மீட்ட = தேவர்களைச் சிறையிலிருந்து  விடுவித்த;
தீர வேல் = தீரம் மிக்க வேல்;
செவ்வேள் = முருகன்;
திருக் கை வேல் = கையிலிருக்கும் வேல்;
வாரி குளித்த வேல் = கடலில் குளித்துத் தன் கறையைப் போக்கிக்கொண்ட வேல்;
கொற்ற வேல் = வெற்றி வேல்;
சூர் மார்பும் குன்றும் = சூரன் மார்பையும், கிரவுஞ்சமலையையும்;
துளைத்த வேல் = பிளந்த வேல்;
உண்டே துணை =  என்றும் எமக்கு துணை;

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும். 4

வேலால் சூரபனமனை வீழ்த்திய அரசனே, முன்பு பனிபடர்ந்த கிரவுஞ்சமலையைப் பிளக்க வேல் வீசினாய், அந்தத் தனிவேலை என் துன்ப மலையை அழிக்க இன்னும் ஒருமுறை ஓங்கி வீசினால் அது தகுதி மிக்க செயலாகும்.

O king who overthrew the Surapanamana by your spear, you threw the spear to split the previously frozen Krauncha hill, and it would be  worthy of you to throw the spear once more to destroy the mountain of my misery.

இன்னம் ஒரு கால் = இன்னும் ஒருமுறை;
எனது = எனது;
இடும்பைக் குன்றுக்கும் = துன்ப மலையை;
கொல் = அழி;
நவில் வேல் = சங்காரம் செய்யும்  வேல்;
சூர் = சூரப
ன்மன்;
தடிந்த = வீழ்த்திய;
கொற்றவா = அரசனே;
முன்னம் =  முன்பு;
பனி வேய் = பனிபடர்ந்த;
நெடுங் குன்றம் பட்டு = கிரவுஞ்சமலைக் குன்றத்தை;
உருவ = பிளக்க;
தொட்ட = வீசிய;
தனி வேலை = தனி வேலை;
வாங்கத் தகும் =  வீசத் தகும்;

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தி வாழ்வே! (5)

உன்னைத் தவிர வேறு ஒருவரையும் நம்பமாட்டேன். பிற்காலத்திலும் உன்னைத்  தவிர வேறொருவரையும்  பின்பற்றேன். பன்னிருகைக் கோல அழகினைக் கொண்டவனே, வானோர்க்குச் செய்த கொடுமையைத் தீர்க்கும் வேலை உடையவனே, திருச்செந்தூரில் வாழ்பவனே, நீயே எனக்குத்துணை.

I will not trust anyone other than you. I will not follow anyone other than you. You are my companion, the one who has the beauty of  twelve hands, You are the one who has the job of resolving the atrocities committed against heavenly beings, You are the one who lives in Thiruchendur.

உன்னை ஒழிய = உன்னைத் தவிர;
ஒருவரையும் = வேறு ஒருவரையும்;
நம்புகிலேன் = நம்பமாட்டேன்;
பின்னை = பிற்காலத்திலும்;
ஒருவரை = ஒருவரையும்;
யான் = நான்;
பின்செல்லேன் =  பின்பற்றேன்;
பன்னிரு கை = பன்னிரு கை;
கோலப்பா= கோல அழகினைக் கொண்டவனே;
வானோர் = தேவர்கள்;
கொடிய  = கொடிய;
வினை = கொடுமை;
தீர்த்தருளும் = தீர்க்கும்;
வேலப்பா = வேலை உடையவனே;
செந்தி வாழ்வே = திருச்செந்தூரில் வா
ழ்பவனே;

அஞ்சும் முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன். 6

முருகா என்று  பிரார்த்திப்பவர்களுக்கு, பயமூட்டும் ஒன்று தோன்றினால் ஆறுதல் தரும் .முருகனுடைய  ஆறுமுகங்களும் தோன்றும்;  கொடிய போரில் ‘அஞ்சாதே’ என்று சொல்லி அதனை வெல்லும்  வேல் தோன்றும். மனத்தில்  ஒருமுறை நினைத்தால், அவனது இரண்டு பாதங்களும் தோன்றும்.

For those who pray to  Murugan, comfort will come if something frightening appears. Murugan's six faces will also appear; Spear  will appear to win the deadly battle by saying ‘Do not be afraid’. When you remember him once in the mind, both his feet will appear in front of you.

அஞ்சும் முகம் தோன்றின் = பயமூட்டும் ஒன்று தோன்றினால்;
ஆறுமுகம் தோன்றும் = முருகனுடைய  ஆறுமுகங்களும் தோன்றும்;
வெஞ் சமரில் =  கொடிய போரில்;
அஞ்சல் என வேல் தோன்றும் = அஞ்சாமலிருக்க வேல் தோன்றும்; 
நெஞ்சில் = மனத்தில்;
ஒரு கால் நினைக்கின் = ஒருமுறை நினைத்தால்;
இரு காலும் தோன்றும் = அவனது இரண்டு பாதங்களும் தோன்றும்;
முருகா என்று ஓதுவார் முன் = முருகா என்று  பிரார்த்திப்பவர்களுக்கு.

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே  ஒரு கை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.7

முருகனே, திருச்செந்தூர் தலைவனே, திருமால் மருமகனே, சிவனின் மகனே, ஒரு கை ஆனைமுகனின் தம்பியே, உன் தண்டை (கழல்) அணிந்த கால்களை எப்பொழுதும் நம்பிக்கையோடு வணங்குவேன்.

Murugan, the chief, of Thiruchendur,  nephew of  Thirumal , son of Shiva, brother of elephant god Ganesha, I will always worship your strong feet with confidence.

முருகனே = முருகனே;
செந்தி முதல்வனே = திருச்செந்தூர் தலைவனே;
மாயோன் மருகனே =  திருமால் மருமகனே;
ஈசன் மகனே  = சிவனின் மகனே;
ஒரு கை முகன் = ஆனைமுகன், விநாயகர்;
தம்பியே = இளையவனே;
நின்னுடைய = உன்னுடைய;
தண்டைக் கால் = தண்டை (கழல்) அணிந்த கால்களை;
எப்பொழுதும் = எப்பொழுதும்;
நம்பியே கைதொழுவேன் = நம்பிக்கையோடு வணங்குவேன்;
நான் = நான்;

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா பூக்கும்
கடம்பா முருகா கதிர் வேலா நல்ல
இடம்காண் இரங்காய் இனி   8

காக்கக் கடமைப்பட்ட நீ காப்பாற்றாமல் இருந்தால்,  நீ யாருக்குப்  பரம்பொருளாவாய். ஆறுமுகவா, பூக்கும் கடம்பை மலரை அணிந்தவனே, முருகா, கதிர்வேலா, நல்ல இடம் கண்டு இனிமேல் இரக்கம் காட்டு.

You have the duty to protect me and if you did not do that, who will you be the lord of. O! Lord of six faces, possessor of the sharp spear and  the one who wears flowers, Muruga,  find a good place and show mercy on me from now on.

காக்கக் கடவிய நீ = காக்கக் கடமைப்பட்ட நீ;
காவாது இருந்தக்கால் = காப்பாற்றாமல் இருந்தால்;
ஆர்க்குப் பரம் ஆம் = நீ  யாருக்குப் பரம்பொருளாவாய்;
அறுமுகவா = ஆறுமுகவா;
பூக்கும் கடம்பா = பூக்கும் கடம்பை மலரை அணிந்தவனே;
முருகா = முருகா;
கதிர் வேலா = கதிர் வேலா;
நல்ல = நல்ல;
இடம்காண் = இடம் கண்டு;
இரங்காய் இனி = இனிமேல் இரக்கம் காட்டு;

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி கண் குளிரக் கண்டு சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9

நெஞ்சே, திருப் பரங்குன்றத்தில் இருக்கும் பன்னிருகை முருகனின் திருவடிகளைக் கண் குளிரக் கண்டதனோடு விட்டுவிடாமல் ஒப்பனையில்லாத திருமுருகாற்றுப்படையைப் பூசை யாகச் சொல்லிக்கொண்டே இரு.

O Mind! Do not stop with seeing the feet of  Murugan with twelve hands in Thiruparankundram but keep reciting Thirumurugatrupadai as your prayer to him.

பரங்குன்றில் = திருப் பரங்குன்றத்தில்;
பன்னிரு கை  = பன்னிரு கை;
கோமான்தன் =  அரசனின்;
பாதம் கரம் கூப்பி = பாதங்களைக் கை கூப்பி;
கண் குளிரக் கண்டு  = கண் குளிரக் கண்டு;
சுருங்காமல் = குறைவு படாமல்;
ஆசையால்  = ஆசையால்;
நெஞ்சே = நெஞ்சே;
அணி = ஒப்பனையில்லாத;
முருகு ஆற்றுப்படையை = திருமுருகாற்றுப்படையை;
பூசையாக் கொண்டே புகல் = பூசை யாக சொல்லிக்கொண்டே இரு.

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல நாள்தோறும் சாற்றினால்  முன் கோல
மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளி
தான் நினைத்த எல்லாம் தரும். 10

நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படையை தன் கோலம் எனக் கொண்டு நாள்தோறும் சொல்லிவந்தால், முருகன் முன்னே வந்து, மனக்கவலையைப்  போக்கி, வேண்டிய எல்லா நன்மைகளையும் தருவான்.

Murugan will come forward and give you all the benefits and get rid of your anxiety if you keep on reciting daily the Thirumurugatrupadai (this hymn) narrated by Nakkirar.

 நக்கீரர்தாம் உரைத்த = நக்கீரர் பாடிய;
நல் முருகு ஆற்றுப்படையை = நல்லஇத்  திருமுருகாற்றுப்படையை;
தற்கோல = தன் கோலம்;
நாள்தோறும் = தினந்தோறும்;
சாற்றினால்  = சொல்லிவந்தால்;
முன் கோல = முன்னே வந்து;
மா முருகன் = முருகன்;
வந்து = வந்து;
மனக் கவலை தீர்த்தருளி = மனக் கவலை  போக்கி;
தான் நினைத்த எல்லாம் தரும் =  வேண்டிய எல்லா நன்மைகளையும் தருவான்;

 

திருச்சிற்றம்பலம்.

Thiruccirrampalam.

 












Comments

Popular posts from this blog

Dakshinamurthy Stotram with meanings of words.